என் மலர்
கிருஷ்ணகிரி
- மன உளைச்சலில் நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நந்தினி (வயது 22).
இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமடையவில்லை. இந்த மன உளைச்சலில் நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஹட்கோ போலிஸ் சரகத்தில் சொல்லகிரி அருகேயுள்ள ஆருபள்ளியை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் குடிபோதையில் கெலவரப்பள்ளி டேம் சப்பளம்மால் கோவில் அருகே குன்றில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தம்பி சின்னப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணினி பயன்பாட்டியல் துறையில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பண முடிச்சுகளும், சான்றிதழ்களும் வழங்க ப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறையில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவி நிர்மலா வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
பெங்களூர் கிரைஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் தயார் செய்வது எப்படி? கணினி வழி பிழை திருத்தங்களை மேற்கொள்ளுதல், அதன் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை, வண்ணங்களை சரியாக பின்பற்றுதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை, வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பண முடிச்சுகளும், சான்றிதழ்களும் வழங்க ப்பட்டன.
விழாவில் கணினி பயன்பாட்டியல் துறை சார்ந்த பேராசிரியர்களான புவனேஸ்வரி, நரேஷ்கு மார் சரண்ராஜ் , சுபாஷினி, தமிழரசன்.கவிதா உள்ளிட்டோர் பயிலரங்கத்தின் நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்தனர்.
பயிலரங்கில் சென்னை, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கணினி துறை சார்ந்த 267 ஆய்வு மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.
விழாவின் நிறைவாக கல்லூரியின் கணினி பயன்பாட்டியல்துறை உதவிப் பேராசிரியர் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.
- வெங்கடேஷ் என்பவரது கண்காணிப்பில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
- 21-ந்தேதி முதல் அண்ணன், தம்பி இருவரும் மாயமாகிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன்கள் சரண் (வயது 13), பவன் (12). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பெரிய ஏரி பகுதியை சேர்ந்த தங்களது உஅரவினர் வெங்கடேஷ் என்பவரது கண்காணிப்பில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி முதல் அண்ணன், தம்பி இருவரும் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து வெங்கடேஷ் தந்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பாகலூர் அருகேயுள்ள குண்டியால்நத்தம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது 17 வயது மகள் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. இது குறித்து பாகலூர் போலீசில் பெருமாள் புகார் செய்துள்ளார்.
மற்றும் ஒரு சம்பவத்தில் நாகரசம்பட்டி அருகேயுள்ள பேருஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரது மகள் கீர்த்தனா (19) என்பவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது தெரிந்து பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கீர்த்தனா மாயமாகியுள்ளார்.இது குறித்து மஞ்சுநாதன் கொடுத்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கெலமங்கலம் பிதிரெட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரது 12 வயது மகள் திடீரென் மாயமாகிவிட்டார் . இதுகுறித்து முனிராஜ் தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
- மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரக் கிளையின் சார்பில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை துளிர் மாணவர் திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது. இத்தகைய தேர்வினை சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தே கவுடா கலந்து கொண்டார். மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், நிர்வாகிகள் பழனி மற்றும் அப்சர் ,ஜெபஸ்டின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு இனிதே ஆரம்பமானது.
இந்த நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரத்தின் வட்டார தலைவர் ஜெபதிலகர் மற்றும் வட்டாரச் செயலர் திருப்பதி மற்றும் பொருளாளர் முனிச்சந்திரன், உறுப்பி னர்கள், பொறுப்பாளர்கள், பள்ளி அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.
- நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்தவர் சதாம் (வயது 22). இவர் தனது நண்பர்கள் ஓசூர் லேக் தெருவை சேர்ந்த கிருஷ்ணா (19), அர்ஜுன் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.
வழியில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த கிருஷ்ண, அர்ஜுன் ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சதாமின் மனைவி நிதா கவுகர் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
- கிராமப்புற தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதும், தொழில் குழுவின் செயல்பாடாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் இட்டிக்கல் அகரம், பெல்லாரம்பள்ளி, மோரமடுகு, சோக்காடி ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது இட்டிக்கல்அகரம் கிராமத்தில் டைல்ஸ் ஓடு பதிக்க பயிற்சி முடித்த 20 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் கறவை பசு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேவகி ஆண்டியப்பனிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மோரமடுகு ஊராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய பண்ணைப்பள்ளியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் இருக்கும் 30 விவசாயிகளுக்கு மா உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு ஊராட்சியில் ஒரே மாதிரியான தொழிலை மேற்கொள்ளும் 15 முதல் 30 நபர்கள் கொண்டு தொழில் குழுக்களை உருவாக்கி, கிராமப்புற தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதும், தொழில் குழுவின் செயல்பாடாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்பானை, பனைவெல்லம், பால் பொருட்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு, ஆயத்த ஆட்டை தயாரிப்பு போன்ற தொழில்கள் மேற்கொள்ள 39 தொழில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களுக்கு தொடக்க நிதியாக ஒரு குழுவிற்கு ரூ.75 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.29 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பயனடைந்த பயனாளிகள், மற்றவர்களுக்கு இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடிமை பணிகள் தேர்வு-2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வு, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
கிருஷ்ணகிரி தாலுகாவில் 9 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது.
- மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் செல்லகுமார் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
இதுதொடர்பாக நான் ஏற்கனவே பெங்களூர் மெட்ரோ ரெயில் நிறுவன தலைவர், கர்நாடகா முதல் மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது,
இத்திட்டம், 2 மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தினேன். தொடர்ந்து, தமிழக அரசு ஓசூர் மெட்ரோ ரெயில்வே திட்ட அளவீடு பணிக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் கொள்கைகள், விதிகளை பார்க்கும் போது, இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த முடியாது என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை செயலாளரை நேரில் சந்தித்து இத்திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து உரிய ஆதாரம், ஆவணங்களுடன் பேசினேன்.
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 21&ந் தேதி, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர், ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து கொள்கை அளவில் ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது.
எனவே, ஆய்வு பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிட வாய்ப்பு இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் சேகர், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, அக.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 9 பேர் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நிர்வாக காரணங்களுக் காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் பாலாஜி, ராஜேஷ், வினோத்குமார், சேட்டு, நேதாஜி, அருள்செல்வம், கலைவாணன், சரத்குமார், மணிவேல் ஆகிய 9 பேர் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக் காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அதை மேற்கண்ட போலீசாரில் சிலர் தட்டி கேட்டதால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
- ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
- வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆம்னி பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், டிராக்டர் கடும் சேதத்தை சந்தித்தது.
இந்த கோர விபத்தில், 3 மாத குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் டிராக்டரில் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
- காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
- நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.
காவேரிபட்டணம்:
தருமபுரி மாவட்டம், நூலகஅள்ளி அருகேயுள்ள எம்.சவுளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 12 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கொட்டா என்ற இடத்தில் உள்ள கத்தாழை தொழிற்சாலையில் தங்கி பணிபுரிவதற்காக இன்று காலை ஒரு டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இன்றுகாலை 7 மணி அளவில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை நிமிர்த்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து நசுக்கியதில் அதில் அமர்ந்து வந்த தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்து (வயது20), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி என்ற 3 மாத பெண் குழந்தை, வசந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் புஷ்பா (35), காசி (35), அருண் (18), முருகன் (45), சதீஷ் (21), செல்லம்மாள் (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த முனுசாமி மற்றும் 3 மாத பெண்குழந்தை வர்ஷினி ஆகியோரின் உடல்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையிலும், மற்ற உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை நடந்த இந்த கோர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் விபத்தில் சிக்கிய டிராக்டர் மற்றும் பேருந்தை சாலை ஓரமாக போலீசார் அகற்றினர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
- பூவரசனை கடித்த பாம்புடன், அவருடைய தாயார் கோமதி ஆஸ்பத்திரிக்குள் வந்தார்.
- பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பூவரசன் (வயது 17).
இவர் நேற்று மாட்டு தொழுவத்தில் இருந்து சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டினார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்தது.
இதில் வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அவருடைய தாயார் கோமதி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது பூவரசனை கடித்த பாம்பு அங்கிருந்த குப்பைக்குள் ஊர்ந்து சென்றது.
பாம்பு குட்டியாக இருந்ததால் அந்த பகுதியில் திரண்டு இருந்தவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பூவரசனை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது பூவரசனை கடித்த பாம்புடன், அவருடைய தாயார் கோமதி ஆஸ்பத்திரிக்குள் வந்தார்.
பின்னர் பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்தனர். பாம்புடன் பெண் வந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த குட்டி பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.






