என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெவ்வேறு சம்பவங்களில் அண்ணன், தம்பி உள்பட 5 பேர் மாயம்
  X

  வெவ்வேறு சம்பவங்களில் அண்ணன், தம்பி உள்பட 5 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெங்கடேஷ் என்பவரது கண்காணிப்பில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
  • 21-ந்தேதி முதல் அண்ணன், தம்பி இருவரும் மாயமாகிவிட்டனர்.

  கிருஷ்ணகிரி,

  கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன்கள் சரண் (வயது 13), பவன் (12). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பெரிய ஏரி பகுதியை சேர்ந்த தங்களது உஅரவினர் வெங்கடேஷ் என்பவரது கண்காணிப்பில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

  இந்நிலையில் கடந்த 21-ந்தேதி முதல் அண்ணன், தம்பி இருவரும் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து வெங்கடேஷ் தந்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதேபோல பாகலூர் அருகேயுள்ள குண்டியால்நத்தம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது 17 வயது மகள் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. இது குறித்து பாகலூர் போலீசில் பெருமாள் புகார் செய்துள்ளார்.

  மற்றும் ஒரு சம்பவத்தில் நாகரசம்பட்டி அருகேயுள்ள பேருஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரது மகள் கீர்த்தனா (19) என்பவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது தெரிந்து பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் கீர்த்தனா மாயமாகியுள்ளார்.இது குறித்து மஞ்சுநாதன் கொடுத்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதேபோல கெலமங்கலம் பிதிரெட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரது 12 வயது மகள் திடீரென் மாயமாகிவிட்டார் . இதுகுறித்து முனிராஜ் தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×