என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவர் திறனாய்வு தேர்வு
  X

  மாணவர் திறனாய்வு தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
  • மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது.

  சூளகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரக் கிளையின் சார்பில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை துளிர் மாணவர் திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

  குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது. இத்தகைய தேர்வினை சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தே கவுடா கலந்து கொண்டார். மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், நிர்வாகிகள் பழனி மற்றும் அப்சர் ,ஜெபஸ்டின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு இனிதே ஆரம்பமானது.

  இந்த நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரத்தின் வட்டார தலைவர் ஜெபதிலகர் மற்றும் வட்டாரச் செயலர் திருப்பதி மற்றும் பொருளாளர் முனிச்சந்திரன், உறுப்பி னர்கள், பொறுப்பாளர்கள், பள்ளி அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×