என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பயிலரங்கம்"

    • கணினி பயன்பாட்டியல் துறையில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பண முடிச்சுகளும், சான்றிதழ்களும் வழங்க ப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறையில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.

    கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவி நிர்மலா வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    பெங்களூர் கிரைஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் தயார் செய்வது எப்படி? கணினி வழி பிழை திருத்தங்களை மேற்கொள்ளுதல், அதன் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை, வண்ணங்களை சரியாக பின்பற்றுதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை, வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பண முடிச்சுகளும், சான்றிதழ்களும் வழங்க ப்பட்டன.

    விழாவில் கணினி பயன்பாட்டியல் துறை சார்ந்த பேராசிரியர்களான புவனேஸ்வரி, நரேஷ்கு மார் சரண்ராஜ் , சுபாஷினி, தமிழரசன்.கவிதா உள்ளிட்டோர் பயிலரங்கத்தின் நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்தனர்.

    பயிலரங்கில் சென்னை, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கணினி துறை சார்ந்த 267 ஆய்வு மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.

    விழாவின் நிறைவாக கல்லூரியின் கணினி பயன்பாட்டியல்துறை உதவிப் பேராசிரியர் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.

    ×