என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.
    • பயிர் செய்வதற்கான தொகை, இழப்பீடு உள்ளிட்டவையை வனத்துறையினர் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஏற்கனவே கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வழங்கி மனுக்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையம் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இதனால் மாவிவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அடுத்த மாதம் இறுதியில் மா முத்தரப்பு கூட்டம் நடத்தி, மாங்காய்களுக்கு உரிய விலையை பெற்று தர வேண்டும். மேலும், மாவட்டத்தில் மா எவ்வளவு உற்பத்தியாகிறது என்பதை ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    தென்பெண்ணை ஆற்று நீரை, மாவட்டத்தில் பு-ஞ்சை நிலங்களில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியங்களை, கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிலத்தில் பயிர் செய்வதற்கான தொகை, இழப்பீடு உள்ளிட்டவையை வனத்துறையினர் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது கால்நடைகளை நோய் தாக்கியதால், பால் வரத்து குறைந்துள்ளது. இதனால் சில தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். பாலுக்கு உற்பத்தி மானியம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்படும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்படிருந்தது.
    • புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 33).இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சமீபத்தில் இவரது செல்போனுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் வந்த தகவலில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்படிருந்தது.

    ஆனால் இந்த வேலையை பெறுவதற்கு பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று மகாலட்சுமியிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 900 வரை வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளனர்.

    ஆனால் அதன்பிறகு அந்த வாட்ஸ்-ஆப் எண்ணை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த மென்பொருள் இஞ்சினீயர் கணேஷ் என்பவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி அவரது கணக்கு தொடர்பான தகவல்களை சேகரித்த மர்ம நபர்கள் கணேஷின் வங்கி கணக்கில் இருந்த ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 500 -ஐ அபேஸ் செய்துள்ளனர்.

    இதுகுறித்து கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி இறந்தார்.
    • முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    ஓசூர்,-

    ஓசூரை சேர்ந்தவர் பார்வதி. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த 15.06.2016 அன்று இவர் உத்தனப்பள்ளி அருகே நடந்து சென்ற போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்தனர்.

    அந்த குற்றவாளிகள் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்து அன்றைய தினம் ஓசூர் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், தற்போதைய தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டருமான நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் அங்கு சென்றனர்.

    அப்போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி இறந்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரு அருகே கே.ஆர்.புரா அருகேயுள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 20), ஓசூரை சேர்ந்த முஜாமில் (22), பெங்களூருவை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி (22), அமர் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதில் ஏட்டு முனுசாமியை கத்தியால் குத்தி கொலை செய்த கொள்ளையன் கிருஷ்ணமூர்த்தி அன்றைய தினமே (16.06.2016) போலீசார் அழைத்து வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டான். மீதம் உள்ள 3 பேர் மீது வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணையின் போதே, விக்கி தற்கொலை செய்து கொண்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரோசிலின் துரை நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமர் விடுதலை செய்யப்பட்டார்.

    • ராணுவ வீரர் பிரபுவின் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
    • பிரபுவின் கொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,-

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரே ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் ராணுவ வீரர் பிரபுவின் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் டாக்டர் வேதாபிரகாஷ், விநாயகமூர்த்தி, அருள்நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் பிரிகேடியர் ரவி முனுசாமி கண்டன உரையாற்றினார். அப்போது, பிரபுவின் கொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது ராணுவ வீரர் பிரபுவின் கொலையில் கைது செய்யப்பட்டு ள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து உடனடியாக குற்றவாளிகள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டன.

    முன்னதாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் வேலுமணி, பெருமாள், நாகராஜ், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போனை அடகு வைத்து 3 பேர் பணம் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
    • கெலமங்கலம் போலீசார் சுரேஷ், சிவகுமார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஏ.கொத்தாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 20). இவரது செல்போன் திருடு போயுள்ளது.

    இந்நிலையில் சாந்தம்மா என்ற பெண் மூர்த்தியின் செல்போனை அடகு வைத்து 3 பேர் பணம் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தனது செல்போனை திருடி அடகு வைத்த அக்கொண்டபள்ளியை சேர்ந்த சுரேஷ் (28), சிவகுமார் (20), ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்த நாகராஜ் (30) ஆகியோரிடம் சென்று நியாயம் கேட்டபோது சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்து தேன்கனி கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கெலமங்கலம் போலீசார் சுரேஷ், சிவகுமார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

    • தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.
    • மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கொத்த கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரம்மா. இவரது மகன் கிரண் (வயது 23). இவர் தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் இந்த காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அவரது காதல் கைகூடவில்லை. இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து சந்திரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள இருதாலம் கிராமத்தை சேர்ந்த சில்பா (31) என்பவர் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து எலிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ராயக்கோட்டை அருகேயுள மோகலூரை சேர்ந்த முனிரத்தினம் (27) என்பவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமாண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முனிரத்தினம் பெற்றோர் கேட்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
    • எம்ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று உச்சநீதி மன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

    இதனை வரவேற்று, ஓசூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூரில் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையருகே, மேற்கு மாவட்ட மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது நிர்வாகிகள் எம்ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இதில், கூட்டுறவு வீட்டு வசதி தலைவர் நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன.
    • வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநி லங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

    இது பற்றி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர். இதில் ஓரு யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் வெளியே வந்தது. அந்த யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இதனால் வனத்து றையினர் இன்றுகாலை அந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.
    • பேரணியை பள்ளியின் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தந்தை ராபர்ட் டீவன்ஸன்மித் பேடன்பவல் பிறந்த பிப்ரவரி 22 -ம் தேதி உலக சிந்தனை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

    இதில் நிறுவனங்களின் நிறுவனர்சீனி.திருமால் முருகன், செயலர் ேஷாபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார் மற்றும் துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் உலக சிந்தனை தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியை பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணிசரவணகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணியில் நேர்மறையான சிந்தனை களை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக சென்று மாணவ, மாணவி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், சிங்கிரிப்பள்ளி, நெடுசாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பெங்களூரா, நீளம், செந்தூரா, மல்கோவா, பீத்தர், ருமானி, பாங்கனபள்ளி கலாப்பாடு போன்ற மாங்கனிகள் சாகுபடி செய்யப்பட்டு இப்பகுதியில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் வளம் நன்றாக இருப்பதால் இப்பகுதியில் அனைத்து கிராங்களிலும் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

    இன்னும் மூன்று மாதங்களில் அனைத்து மாமரங்களிலும் மாங்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக வரும் நிலையில் தற்போது மா பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாங்காய் விலை அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள மா மரங்களுக்கு மா பூக்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் மாமரங்களை சுத்தம் செய்தல் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை ஓரங்களில் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்து குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மா பூக்கள் கவர்ந்துள்ளது.

    • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
    • யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

    இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதில் ஒரு யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் வெளியே வந்தது. அந்த யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இதனால் வனத்துறையினர் இன்று காலை அந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஏரியை ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.
    • போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரம்பட்டி அருகே உள்ள சூரக்கல்மேட்டில் குண்டல் குட்டை ஏரி உள்ளது.

    இந்த ஏரி 24 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிலத்தில் 10 ஏக்கா் நிலத்தை அருகில் வசிப்பவா்கள் ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.

    இதையடுத்து ஏரி நில ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறையினா் நோட்டிஸ் அனுப்பினா். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளாததால் நேற்று ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய்த் துறையினா், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா். பின்னா் ஏரியில் புதிதாக கரை கட்டப்பட்டது.

    ×