என் மலர்
நீங்கள் தேடியது "உயிரை மாய்த்த வாலிபர்"
- தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.
- மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கொத்த கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரம்மா. இவரது மகன் கிரண் (வயது 23). இவர் தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இந்த காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அவரது காதல் கைகூடவில்லை. இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சந்திரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள இருதாலம் கிராமத்தை சேர்ந்த சில்பா (31) என்பவர் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து எலிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ராயக்கோட்டை அருகேயுள மோகலூரை சேர்ந்த முனிரத்தினம் (27) என்பவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமாண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முனிரத்தினம் பெற்றோர் கேட்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலி ஏமாற்றியதால் விரக்தி
- பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.
கோவை:
பெரம்பலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). பெயிண்டர். இவர் குடும்பத்துடன் கோவை துடியலூர் நஞ்சப்பன் காலனியில் தங்கி உள்ளார்.
இவரது மகன் நித்திஷ் (21). இவர் பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். நித்திஷ் கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். இருவரும் சந்திப்பதை தவிர்த்தனர். அப்போது நித்திஷ் காதலித்து வந்த பெண் வேறொருவரை காதலிப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அவர் தனக்கு சரியான வேலை கிடைக்காததாலும், தனது காதலி வேறொருவரை காதலிப்பதை தெரிந்ததாலும் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்ககையில் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்தார்.விஷம் குடித்தாலும் உயிர் தப்பி விடுவோமோ என நினைத்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.
வெளியே சென்று இருந்த ராஜேந்திரன் வீடு திரும்பினார். அப்போது நித்திஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.பின்னர் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நித்திஷின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






