என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு ஆயுள்"

    • கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி இறந்தார்.
    • முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    ஓசூர்,-

    ஓசூரை சேர்ந்தவர் பார்வதி. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த 15.06.2016 அன்று இவர் உத்தனப்பள்ளி அருகே நடந்து சென்ற போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்தனர்.

    அந்த குற்றவாளிகள் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்து அன்றைய தினம் ஓசூர் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், தற்போதைய தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டருமான நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் அங்கு சென்றனர்.

    அப்போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி இறந்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரு அருகே கே.ஆர்.புரா அருகேயுள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 20), ஓசூரை சேர்ந்த முஜாமில் (22), பெங்களூருவை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி (22), அமர் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதில் ஏட்டு முனுசாமியை கத்தியால் குத்தி கொலை செய்த கொள்ளையன் கிருஷ்ணமூர்த்தி அன்றைய தினமே (16.06.2016) போலீசார் அழைத்து வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டான். மீதம் உள்ள 3 பேர் மீது வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணையின் போதே, விக்கி தற்கொலை செய்து கொண்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரோசிலின் துரை நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமர் விடுதலை செய்யப்பட்டார்.

    ×