என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதில் ஒரு யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் வெளியே வந்தது. அந்த யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் வனத்துறையினர் இன்று காலை அந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






