என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது40). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சிவசக்திக்கு கமலா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் சேலம் அருகே தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக சிவசக்தி பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 19-ம் தேதி திருவயலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் சேலத்திற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சிவசக்தி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    • சாலையோரம் 4,000 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
    • சாலையோரம் மரங்கள் நடப்படாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள், நேற்று ஓசூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் செந்தில்குமாரிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

    மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    "ஓசூர் முதல் சானமாவு வரை நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதையொட்டி அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, 1மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும் என்ற அரசு விதிப்படி, அந்த பகுதியில் சாலையோரம் 4,000 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது.

    பின்னர், பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், " 4,000 மரங்களை காட்டுப்பகுதியில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. சாலையோரம்தான் மரங்கள் நடவேண்டும். அவ்வாறு சாலையோரம் மரங்கள் நடப்படாவிட்டால் 1 வார காலத்திற்கு பிறகு, சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தி, மரங்களை நட்டபிறகு பணிகளை தொடர வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டியன், அனில்குமார், ஆண்ட்ரூ சார்லஸ், அம்ருத், சரத் சங்கர், தாவூத் இப்ராகிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருகிறது.
    • குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பஞ்சாயத்து உட்பட்ட இலக்கம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்க வில்லை எனவும், மேலும் இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருவதாகவும் அவற்றையே நம்பி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களை உரிய நேரத்துக்கு அனுப்பி வைப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது.

    கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பழுதான மின் மோட்டாரை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும், அவற்றை உடனே சீர் செய்து அனைத்து வீதிகளிலும் சிறிய அளவு குடிநீர் டேங்க் பொருத்தி முறையான குடிநீர் வழங்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக காட்டேரி பஞ்சாயத்து தலைவரை தொடர்பு கொண்டபோது மின்மோட்டார் காயில் பகுதி பழுதானதாகும். அதனால் அதை சீர் செய்ய ஒரு சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தினால் இன்று சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று மோட்டாரை பொருத்தி முறையாக குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக கூறினார்.

    • திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    ஜனதா நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க் கையில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும், ஆர்.சி பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெங்களூரு சாலையை டாக்டர். அம்பேத்கர் சாலை என மாற்ற வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகமாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலா ளர்கள் மீசை அர்சுணன், கோவிந்தராஜ், பட்டியல் அணி பார்வை யாளர் திருமலைபெருமாள், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த மோடியின் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து அறப்போராட்டம் நடந்தது.
    • நகர தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், நகர காங்கிரஸ் கட்சி சார்பில், திட்டமிட்டு காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த மோடியின் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து அறப்போராட்டம் நடந்தது.

    நகர தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நடராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, கிருஷ்ணமுர்த்தி, மாவட்டத் துணைத்தலைவர்கள் ஜெயபிரகாஷ், சேகர், மாநில செயலாளர் ஆறுமுகம், முத்த வழக்கறிஞர் அசோகன், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ் பாபு, எஸ்.சி., எஸ்.டி., துறை மாநில பொறுப்பார் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறப்போராட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்திலும், ராகுல் காந்தியின் வளர்ச்சியை கண்டு அஞ்சியும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவரது எம்.பி., பதவியை பறித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமையிலான சர்வாதிகாரி பா.ஜ., அரசுக்கு முடிவு கட்டும் வகையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் இந்த நாளில் துணை நிப்போம் என்றனர்.

    இதில், மாவட்டத் துணைத்தலைவர் விவேகானந்தன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர்கள் நஞ்சுண்டன், ரவிச்சந்திரன், தனசெழியன், மாது, ஆடிட்டர் வடிவேல், தனசேகரன், பாண்டுரங்கன், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, சேவாதாளம் மாவட்டத் தலைவர் நாகராஜ், ஊடக பிரிவு கமலகண்ணன், சத்தியசீலன், அமைப்புசாரா மாவட்டத் தலைவர் சிவலிங்கம், முனுசாமி, பிரபாகரன், கவுதமன், பெருமாள், கட்டுமான சங்கத் தலைவர் சத்தியசீலன், கோவிந்தன், இளைஞர் அணி மாவட்டத் துணைத்தலைவர் வாஜித், மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஆரோக்கியசாமி, மடத்தானுார் ஆறுமுகம், தேவநாரயணன், கோவிந்தராஜ், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • இவர்களுக்குள் அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தகராறில் கையாலும் ஹாக்கி ஸ்டிக்காலும் கொண்டு கோவிந்தராஜ் மற்றும் முரளி மோகனை தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜு (வயது28), அதே பகுதியைச் சேர்ந்த வினய்தேஜா (22), வினோத் குமார் (26). இவர்களுக்குள் அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த தகராறில் கையாலும் ஹாக்கி ஸ்டிக்காலும் கொண்டு கோவிந்தராஜ் மற்றும் முரளி மோகனை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் காயம் அடைந்து ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து வினய்தேஜா மற்றும் வினோத்குமாரை கைது செய்தனர்.

    • இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர்.
    • மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த சூளகிரி பேரிகை செல்லும் ரீங் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது.

    இந்தபள்ளிக்கு சூளகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1835 மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். அவர் களுக்கு 47 ஆசிரியர்கள் வருகை தந்து கல்வி அளித்து வருகின்றனர்.

    பொதுவாக இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக மே மாத கடைசியில் பணி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் பள்ளி நலனுக்காக மாணவிகள், ஆசிரியர்கள் குடிநீர் வசதிக்காகவும் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார். அவரை மாணவிகள், ஆசிரியர்கள், பி,டி,ஏ நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • விண்ணப்ப ப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • மாதந்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500, மருத்து வப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    வயது முதிர்ந்த தமிழறி ஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்வளர்ச்சி த்த்துறை உதவி இயக்குநர் பவானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

    ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லை னில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதாற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப ப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500, மருத்து வப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்கநர் அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

    நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக ்கொள்ளபட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சரஸ்வதி கழுத்து இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது51). இவரது கணவர் இறந்து விட்டார். சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு சொந்தமான நிலம் பழைய பேட்டை அருகே உள்ளது. அந்த காலி நிலத்தை நேற்று ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். சரஸ்வதி புதிய வீடு கட்டி வருகிறார். பணத்தை வீட்டில் வைத்து நேற்றிரவு அவர் அயர்ந்து படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் சரஸ்வதி வீடு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரஸ்வதி கழுத்து இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

    இது ெதாடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரம் அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், பத்து குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், இரண்டு முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும், குழந்தை நல பணியாளர்கள் நலன் கருதியும், கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடவேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்தால், அவரது வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அலுவலகம் முன்பும் அங்கான்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். குப்பம்மா, ஜெகதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்து?ரி பங்கேற்றார்.

    • தொழில் காரணமாக கடன் வாங்கி உள்ளார்.
    • கடன் தொல்லை யால் மன உளைச்சல் அடைந்த ரவிச்சந்திரன் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 65) ,இவர் கிருஷ்ணகிரியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். தொழில் காரணமாக கடன் வாங்கி உள்ளார்.

    இந்த கடன் தொல்லை யால் மன உளைச்சல் அடைந்த ரவிச்சந்திரன் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
    • இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மேகலா (வயது50), இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 9 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    ×