என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசைக் கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
    X

    மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்

    • ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த மோடியின் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து அறப்போராட்டம் நடந்தது.
    • நகர தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், நகர காங்கிரஸ் கட்சி சார்பில், திட்டமிட்டு காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த மோடியின் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து அறப்போராட்டம் நடந்தது.

    நகர தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நடராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, கிருஷ்ணமுர்த்தி, மாவட்டத் துணைத்தலைவர்கள் ஜெயபிரகாஷ், சேகர், மாநில செயலாளர் ஆறுமுகம், முத்த வழக்கறிஞர் அசோகன், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ் பாபு, எஸ்.சி., எஸ்.டி., துறை மாநில பொறுப்பார் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறப்போராட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்திலும், ராகுல் காந்தியின் வளர்ச்சியை கண்டு அஞ்சியும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவரது எம்.பி., பதவியை பறித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமையிலான சர்வாதிகாரி பா.ஜ., அரசுக்கு முடிவு கட்டும் வகையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் இந்த நாளில் துணை நிப்போம் என்றனர்.

    இதில், மாவட்டத் துணைத்தலைவர் விவேகானந்தன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர்கள் நஞ்சுண்டன், ரவிச்சந்திரன், தனசெழியன், மாது, ஆடிட்டர் வடிவேல், தனசேகரன், பாண்டுரங்கன், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, சேவாதாளம் மாவட்டத் தலைவர் நாகராஜ், ஊடக பிரிவு கமலகண்ணன், சத்தியசீலன், அமைப்புசாரா மாவட்டத் தலைவர் சிவலிங்கம், முனுசாமி, பிரபாகரன், கவுதமன், பெருமாள், கட்டுமான சங்கத் தலைவர் சத்தியசீலன், கோவிந்தன், இளைஞர் அணி மாவட்டத் துணைத்தலைவர் வாஜித், மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஆரோக்கியசாமி, மடத்தானுார் ஆறுமுகம், தேவநாரயணன், கோவிந்தராஜ், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×