என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி உஸ்தலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவர் அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சை பழையபேட்டை பகுதியில் இருந்து 5ரோடு பகுதிக்கு சென்றார். அப்போது பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அரசு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அதேபகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்கிற சுக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

    • என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
    • என்டி ராமாராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

    என்.டி .ராமராவ் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல துறைகளில் சாதனை படைத்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தார்.

    என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமமான நிம்மகுருவில், இது பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது மாமா மற்றும் அத்தைக்கு குழந்தை இல்லை. அவர் தனது தந்தைவழி மாமாவுக்கு தத்தெடுக்கப்பட்டார். அவர் முதன்முதலில் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு ஆசிரியரால் கல்வி கற்றார்.


    என்.டி.ஆர்

    ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, குழந்தைகள் பொதுவாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக, அவரது தந்தை அவரை விஜயவாடாவுக்கு அனுப்பினார். அங்கு அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். 1947-ல், குண்டூர் மாவட்டத்தின் பிரதிபடு என்ற இடத்தில் சப்-ரிஜிஸ்ட்ராராக மெட்ராஸ் சர்வீஸ் கமிஷனில் சேர்ந்தார். பின்னர் ஆந்திர சினிமாவில் நுழைந்தார். ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி. ராமராவ்.

    'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமரின் குணங்களாக வர்ணிக்கப்படும் அமைதியும், சாந்தமும் ராமராக நடித்த என்.டி.ஆரின் முகத்தில் தவழும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால், ஆழமாக நடித்திருப்பார். அவரை ராமர் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் சம்பூர்ண ராமாயணம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

    அதேபோல, கிருஷ்ணர் என்றாலும் ராமராவ்தான் கண் முன் நிற்பார். 'மாயா பஜார்', 'கர்ணன்' படங்களில் கிருஷ்ணராகத் தோன்றுவார். இதிகாசப்படி கிருஷ்ணர் கொஞ்சம் எதிரிகளிடம் குறும்புடன் விளையாடுவார். ராமராக நடிக்கும்போது அமைதியும் சாந்தமும் ராமராவின் உணர்ச்சி பாவங்களாக இருந்தது என்றால், கிருஷ்ணராக நடிக்கும்போதோ அதற்கேற்ப அவர் முகத்தில் குமிழ் நகையும் குறும்பும் கொப்பளிக்கும்.


    என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர்

    தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற திரைப் பாடல்களில் ஒன்றான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்..' பாடலில், வயோதிகராக வந்து அசத்துவார் ராமராவ். கர்ணனனாக நடிக்கும் சிவாஜி கணேசனிடம் தர்மத்தை தானமாகப் பெற முயலும்போது, கர்ணனின் நிலையைப் பார்த்து பரிதாபப் பார்வை பார்ப்பார். அதேநேரம், அவனுடைய தர்மப் பலன்கள் அனைத்தையும் பெற்றால்தான் கர்ணன் உயிர்போகும் என்பதால் தானத்தைப் பெற்றுவிடுவதில் காட்டும் முனைப்பு என்று நடிப்பில் என்.டி. ராமராவ் கொடி நாட்டியிருப்பார்.

    ராமராவ் நடித்து 1951-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பாதாள பைரவி' திரைப்படத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையும் ரசிக்கும். என்டி ராமராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். தகுதியற்ற ஆட்சியில் இருந்து ஆந்திராவை விடுவிப்ப தற்கான வரலாற்று தேவையின் அடிப்படையில் இந்த கட்சி ஆரம்பிக்க ப்பட்டதாக அவர் கூறினார். ஊழலில் ஈடுபடாத படித்த வேட்பா ளர்களை நிறுத்த முடிவு செய்தார்.

    இது அந்த நேரத்தில் ஒரு புதுமையான அரசியல் கருத்தாக இருந்தது. எம்ஜிஆர் பாணியில் திறந்த வேனில் சென்று ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். தெலுங்கு மக்களின் சுயமரியாதை என்ற நோக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இதனால் 1983-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 202 இடங்களில் வென்று அவர் முதல் முறையாக முதல் அமைச்சரானார். தொடர்ந்து 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றினார்.

    என்.டி. ராமாராவ் 1996 -ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 72 வயதில் மாரடைப்பால் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தியை அவரது 2-வது மனைவி லட்சுமி பார்வதி எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, மே 2004 -ல் ஸ்ரீரங்கப்ப ட்டினத்தில் கரைத்தார்.


    என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர் -இந்திரா காந்தி

    உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கிய என்.டி.ஆர்., சினிமாவையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க உதவியவர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராமராவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் பெயரிலும் ராமன் உண்டு. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் என்றால் தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர். இருவருமே அரசியலில் ஈடுபட்டு மாநில முதல்-அமைச்சரானவர்கள்.

    எம்.ஜி.ஆருக்கும் என்.டி.ராமராவுக்கும் உள்ள நட்பும் நெருக்கமும் நாடறிந்தது. 'எனது குருநாதர் எம்.ஜி.ஆர்.' என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராமராவ்.

    ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்-அமைச்சராக என்.டி. ராமராவ் பதவியேற்றார். தன்னிடம் ஆசிபெறுவதற்காக சென்னை வந்த என்.டி.ராமராவுக்கு அவரை கவுரவிக்கும் விதமாக தனது தோட்டத்தில் எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்படியே சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையையும் அதைத் தீர்க்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் யோசனையையும் என்.டி.ராமராவிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர் சொன்னால் என்.டி.ஆரிடம் மறுப்பேது? அப்போது உருவானதுதான் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் 'தெலுங்கு கங்கைத் திட்டம்'. பதவியேற்ற அடுத்த 4 மாதங்களில் 1983,மே 25-ந் தேதி சென்னையில் நடந்த தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் சென்னை நகரின் தாகம் தீர்க்க உதவியிருக்கிறார் நூற்றாண்டு நாயகர் என்.டி. ராமராவ்.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் மண்டலம் வேமகிரியில் இன்றும் நாளையும் முன்னாள் முதல் -அமைச்சர் எம் டி ராமராவ் நூற்றாண்டு விழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு பிறந்த ஆண்டு என்பதாலும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் ஆனதாலும், மாநாடு வரலாற்றில் இடம்பிடிக்க எல்லாம் தயாராகி விட்டது. இதற்காக 10 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    வெகு தொலைவில் அமர்ந்திருப்ப வர்களும் நிகழ்வைக் காணும் வகையில் 20 எல்இடி திரைகள் பொருத்த ப்பட்டுள்ளன. நாளை மாலை 15 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடக்கிறது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமர்வதற்காக 4,000 சதுர அடியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    • விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளியம்மாள் அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தான் பிளஸ்-2க்கு பிறகு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை மன்னார் மறுத்துள்ளார்.

    இதனால் விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மாணவியை மீட்டு உடனே சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவி காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்தும் படிக்க கூடாது என்று தந்தை மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக செல்கின்றனர்.
    • இரவு நேரங்களில் ட்யூப் லைட்களின் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர்,பெங்களூர் போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர் .

    மேலும் பாலத்தை தாண்டி சினிமா தியேட்டர் மற்றும் ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் சினிமா பார்த்துவிட்டு வருபவர்கள் இப் பாலத்தின் வழியாக வரும்பொழுது மிகவும் அச்சத்துடன் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இப்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் சரியாக எரிவதில்லை. மேலும் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் ட்யூப் லைட்கள் என்பதால் இதன் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    இதனால் பாலத்தின் மீது வரும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வழிப்பறி ஏதாவது நடந்து விடுமோ என்ன அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.வாகன ஓட்டிகளுக்கு தேவையான வளிச்சம் கிடைக்காததால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் மீது அதிகம் வெளிச்சம் தரக்கூடிய லைட்டுகளை பொருத்தி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி, ஜூஸ் கம்பெனிக்கு சென்றது.
    • காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

     ஓசூர்,

    பெங்களூரில் இருந்து மினி லாரியில் 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, மினி லாரி ஒன்று, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி, அங்குள்ள ஒரு ஜூஸ் கம்பெனிக்கு சென்றது. வழியில், ஓசூர் அருகே காந்திநகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால், காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், மினி லாரியின் இடது புறம் பலத்த சேதமடைந்து, அப்பளம் போல் நசுங்கியது. மேலும் லாரியில் இருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டி சிதறின. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜேசிபி வாகனம் வரவழைத்து அதன் மூலம் சாலையில் கொட்டி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தினர்.

    இதில் வாகனங்களின் சக்கரங்கள் ஏறி சென்றதில் மாங்காய்கள் அதிக அளவில் சேதமானது. அதேபோல சாலையில் சென்ற பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி கீழே கொட்டி கிடந்த மாங்காய்களை அள்ளி சென்றனர்.

    இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய பின்னர் நிலைமை சீரானது.

    • ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொத்தகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். எனவே, சுற்று வட்டார கிராம மக்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலை கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கோவிலின்

    • 12-ம் வகுப்பு வரை மத்தூர் கலைமகள் கலாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
    • ஹரிணியை கிருஷ்ணகிரி மாவ ட்ட கலெக்டர் சரயு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவி. இவரது மனைவி கோமதி அரசுப் பள்ளி ஆசிரியை இந்த தம்பதியிரின் மகள் ஹரிணி (26). இவர் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை மத்தூர் கலைமகள் கலாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்து பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து கோயமுத்தூரில் அரசு வேளாண்மை கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடாயில் பயின்று அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் 289 இடத்தில் வெற்றி பெற்று இமாலாய சாதனை படைத்து கிருஷ்ணகிரி மாவட்ட த்திற்கும், மத்தூர் ஒன்றியத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

    ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஹரிணியை கிருஷ்ணகிரி மாவட்டாட்சித் தலைவர் சரயு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டி தனது மகள் ஐ ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமும் ஆக்கமும் அளித்த பெற்றோர்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மகேஸ்வரி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்குமார், துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சந்துக்கடைகள், மதுவிற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • ஊறல் விற்பனை குறித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, கள்ளச்சாராய ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்து அமலாக்கப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் கள்ளச்சாராயம், ஊறல், வெளிமாநில மது, உதிரி விற்பனை மது, அனுமதி பெறாத மதுபானக்கூடம் உள்ளிட்ட 5 இனங்களின் மீது கவனம் செலுத்தி, கள்ளச்சாராயத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் விற்பனை மேலாளர், மதுபான கடைகள் திறக்கும், மூடும் நேரங்கள் சரியாக பின்பற்றிட வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதியின்றி ஏதேனும் மதுபானக் கூடங்கள் செயல்படுகிறதா, திறந்தவெளியில் மதுப்பிரியர்கள், மதுகுடிக்கிறார்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு தனிநபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மதுவகைகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக அனைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    தாபா ஓட்டல்களில் மதுவிற்பனை, மதுகூடங்கள் செயல்பட வாய்ப்பு உள்ளதால், அனைத்து தாபா ஓட்டல்களின் விவரங்களை சேகரித்து, மதுவிலக்கு போலீசார் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் 119 டாஸ்மாக் கடைகளில் விற்பனை விவரத்தை சேகரித்து, குறைவான விற்பனை பகுதிகளில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். சந்துக்கடைகள், மதுவிற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைத்து உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தளி, தேன்கனிக்கோட்டை மலைகிராமங்களில் ஊறல் விறப்னை அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திட வேண்டும்.

    அரசு அனுமதி பெறாத மதுபான கடைகளை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, தயாரிக்கும் நபர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டிற்கு 63740 00754 எண்ணில் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு கள்ளச்சாரயம் குறித்து தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், உதவி கலெக்டர் பாபு, உதவி ஆணையர் (ஆயம்) சுகுமார், கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கவிபிரியா (21) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்த்தீர்த்தம் அருகே ஊத்தங்கரை-சேலம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் கைது செய்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் ஹவுசிங்போர்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது34), தினஷே் (32), கோவிந்தசாமி (38), ஸ்ரீதர் (33), ரவி (38), முனியப்பா (32) ஆகிய 6 பேர் சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    • விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னஎலத்தகிரியை சேர்ந்தவர் அஞ்சப்பா (வயது60). இவரது மனைவி சரசம்மா (45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது. இதனால் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அஞ்சப்பா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தன.
    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் கிராமம் வெள்ளிமலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 22-ந் தேதி மாலை முதல்கால வேள்வி பூஜையும், விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து இரண்டாம் கால யாக வேள்வியும், மூன்றாம் கால யாக வேள்வியும், நேற்று முன்தினம் நான்காம், ஐந்தாம் கால யாக வேள்வியும், அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தன.

    நேற்று காலை விநாயகர் பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம் ஆகியவையும், 8 மணிக்கு கடம் புறப்பாடு, விமான கோபுரம், ஸ்ரீவள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீமுருகப் பெருமான் கோவில் மற்றும் விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து மகா நெய் வேத்தியம், கோ பூஜை, மகா தீபாராதனையும், தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    ×