கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி உஸ்தலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவர் அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சை பழையபேட்டை பகுதியில் இருந்து 5ரோடு பகுதிக்கு சென்றார். அப்போது பஸ் பாப்பாரப்பட்டிக்கு வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அரசு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அதேபகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்கிற சுக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com