search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணை ஆற்று பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    தென்பென்னை ஆற்று பாலத்தின் மீது பொருத்தபட்டுள்ள டியூப்லைட்டை படத்தில் காணலாம்.

    தென்பெண்ணை ஆற்று பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

    • தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக செல்கின்றனர்.
    • இரவு நேரங்களில் ட்யூப் லைட்களின் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர்,பெங்களூர் போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர் .

    மேலும் பாலத்தை தாண்டி சினிமா தியேட்டர் மற்றும் ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் சினிமா பார்த்துவிட்டு வருபவர்கள் இப் பாலத்தின் வழியாக வரும்பொழுது மிகவும் அச்சத்துடன் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இப்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் சரியாக எரிவதில்லை. மேலும் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் ட்யூப் லைட்கள் என்பதால் இதன் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    இதனால் பாலத்தின் மீது வரும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வழிப்பறி ஏதாவது நடந்து விடுமோ என்ன அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.வாகன ஓட்டிகளுக்கு தேவையான வளிச்சம் கிடைக்காததால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் மீது அதிகம் வெளிச்சம் தரக்கூடிய லைட்டுகளை பொருத்தி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×