லாரி மோதி கூலித்தொழிலாளி சாவு

சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
லாரி மோதி கூலித்தொழிலாளி சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கவிபிரியா (21) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்த்தீர்த்தம் அருகே ஊத்தங்கரை-சேலம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com