என் மலர்
கரூர்
- மூதாட்டி திடீர் இறந்தார்.
- இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
தென்னிலையில் உள்ள கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
கரூர் தெற்கு காந்திகிராமம் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (51). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட ராஜமாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், நொய்யல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சரவணன் தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் குறுக்குச்சாலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது குறுச்சாலை பகுதியில் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிள், சரவணன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தவறி விழுந்து சரவணன், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சக்திவேலுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சரவணனின் தந்தை சாமியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் :
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள செம்மேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் தனது மனைவி பிரியாவுடன் கரூர் அருகே உள்ள வாங்கல் எல்லைமேடு பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே பணப்பிரச்சினையால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பால்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பால்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.3½ லட்சத்துக்கு ஏலம் போனது
- கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் விற்பனையானது
கரூர்,
கரூர் நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில், கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 45.70 குவிண்டால் எடை கொண்ட 123 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 891-க்கு நிலக்கடலை விற்பனையானது.
- கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்மமுறையில் இறந்தார்
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் குளத்து வாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவர் யார?் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் அம்மையப்ப கவுண்டர் (வயது 88) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடப்பது அம்மையப்ப கவுண்டர் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்:
கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி அருகே உள்ள கே.பி.தாளப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்(வயது 32). இவர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி (27) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரசாத் வழக்கம்போல் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் குப்பம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முருகேசன்(வயது 29), நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த ரவி(46), மரவம்பாளையம் நாடார்புரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(50), பெரிய வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்(57) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.5 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.35 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
- முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.29-க்கு விற்பனையானது
கரூர்:
கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 75.52½ குவிண்டால் எடை கொண்ட 20 ஆயிரத்து 949 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.15-க்கும், சராசரி விலையாக ரூ.19.95-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 836-க்கு விற்பனையானது. அதேபோல் 208.77 குவிண்டால் எடை கொண்ட 441 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.79-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.59-க்கும், சராசரி விலையாக ரூ.74.25-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 79 ஆயிரத்து 464-க்கு விற்பனையானது. 136.61 குவிண்டால் எடை கொண்ட 184 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.136.59-க்கும், சராசரி விலையாக ரூ.146.09-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.09-க்கும், சராசரி விலையாக ரூ.143.09-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 541-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.35 லட்சத்து 2 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.
- கரூரில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யபட்டது
- போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கரூர்:
குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்சாயத்து கண்ணல் வடநாயக்கன்பட்டியில் கிராவல் மண் கடத்துவதாக, குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, தோகைமலை போலீசார் அங்கு சென்றனர். அப்போது டிப்பர் லாரியில், கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து தப்பி ஓடிய பாலசமுத்திரடபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் குரு (35), விராலிமலை அடுத்த கோடாலிகுடியை சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் (39) ஆகிய இருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கரூர்,
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை ஓட்டம் என்ற மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.காகிதபுரம் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வேலாயுதம் பாளையம் ரவுண்டானா சென்று திரும்பும் வகையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 432 பேர் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசாக 100 பேருக்கு தலா ரூ. 500 வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காகித ஆலை சார்பில் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட சுற்றுசூழலுக்கு ஏற்ற டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம், காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டிகங்காதர், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கையேட்டினை எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட அதனை உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் பெற்று கொண்டார்.
தொடர்ந்து காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத் தோட்டம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், காகித ஆலை வனத்தோட்டத்துறை மற்றும் மனித வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காகித ஆலை நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (வனம்) நன்றி கூறினார்.
- சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நி லையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதை கரூர் எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது கோட்ட மேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற சிவானந்தம் (எ) ஊமையன் (வயது 54) மற்றும் நச்சலூரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற இடும்பன் மகன் பொன்னர் (57) ஆகிய 2 பேரை பிடித்த தனிப்படை போலீசார் குளித்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் குளித்தலை போலீசார் 2 பேர் மீது வழக்குபதிந்து நேற்று கைது செய்தனர் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






