என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பலி
  X

  நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கரூர்:

  கரூர் மாவட்டம், நொய்யல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சரவணன் தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் குறுக்குச்சாலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது குறுச்சாலை பகுதியில் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிள், சரவணன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தவறி விழுந்து சரவணன், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

  இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சக்திவேலுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சரவணனின் தந்தை சாமியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×