என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கரூர் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  கரூர் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூர் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  கரூர் :

  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள செம்மேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் தனது மனைவி பிரியாவுடன் கரூர் அருகே உள்ள வாங்கல் எல்லைமேடு பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே பணப்பிரச்சினையால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பால்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.

  இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பால்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×