என் மலர்tooltip icon

    கரூர்

    • புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரியில்பகடிவதை தடுப்பு - காவலர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது
    • பெண்கள்‌‌ மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகடிவதை தடுப்பு மற்றும் காவலர் அமைப்பு துவக்கவிழா நடைபெற்றது. துவக்க விழாவிற்கு அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சாருமதி விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை ஒருங்கிணைப்பாளர்மேனகா அறிமுகம் செய்துவைத்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, உதவி ஆய்வாளர் முத்துமணி , சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் தலைமை காவலர் சாந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கங்களை விரிவாக எடுத்துக்கூறினாகள். இவ்விழாவில் துணை முதல்வர், கலைப்புலத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பகடிவதை மற்றும் காவலர் அமைப்பு' ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். முடிவில் இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி நதிமலர் நன்றி கூறினார்.

    • கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது
    • நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே எடுத்து கூறப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மனோ சாமுவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி உதவி பேராசிரியர் விவேக் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே உரையாற்றினார்.நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கீர்த்தி தேவி, ராகவி, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கரூர் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்
    • அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன

    கரூர்,

    குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்ற தண்ணீர்ப் பள்ளி சேடர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    • வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாததால்

    கரூர்:

    கரூர் தரகம்பட்டி அருகே உள்ள தனகப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சிறும்பாயி (வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறும்பாயி சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறும்பாயி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சிறும்பாயின் மகன் மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் நடவடிக்கை

    கரூர் 

    கரூர் குளித்தலை அருகே உள்ள மையிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் மது விற்ற வடக்கு புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    கரூர்

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கந்தனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாங்கல் பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மணல் லாரிகளால் தொடரும் விபத்து

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் கடைவீதியில் ஓட்டல், கறிக்கடை, வணிக வளாகங்கள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாங்கல் கடைவீதி வழியாக குவாரிகளில் இருந்து அள்ளப்பட்ட மணல் லாரிகளில் ஏற்றப்பட்டு வேகமாக சென்று வருகின்றன. மேலும் லாரிகளால் அந்த பகுதியில் விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், குழந்தைகள், வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மணல் லாரிகள் வாங்கல் கடைவீதி வழியாக வருவதை தடுத்து உடனடியாக மாற்றுவழி ஏற்படுத்தி அனுப்ப வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு வாங்கல் போலீஸ்நிலையத்தில் வாங்கல் கடைவீதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து வாங்கல் கடைவீதி வழியாக மணல் லாரிகள் சென்று வந்தன.

    இந்நிலையில் மணல் லாரிகள் கடைவீதி வழியாக வருவதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்தி வாங்கல் ஊர்பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நேற்று வாங்கல் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாங்கல்-மோகனூர் சாலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அந்த பகுதியில் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 15 நாட்களுக்குள் மணல் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    கரூர்

    நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கு விற்றது நேற்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்றது ரூ.5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4,500-க்கு விற்றது ரூ.ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கு விற்றது ரூ.2,500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
    • பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    கரூர்

    கரூர் தோகைமலையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒன்றிய அளவிலான ஆலோசனை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க முடியாத குடும்பங்களை அறிந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களை எடுத்துக்கூறி வழி காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இளந்தளிர் இல்லம் என்ற திட்டம் மூலம் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்கும் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    • வி.சி.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கரூர்:

    கரூர் தாந்ேதாணிமலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அகரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கரூர், திருச்சி மண்டல செயலாளர் தமிழ் ஆதன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில், வருகிற டிசம்பர் மாதத்தில் திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கரூரில் இருந்து 100 வாகனங்களில் செல்வது, மழைக்காலங்களில் சுங்ககேட்டில் இருந்து கரூர் அரசு கலைக்கல்லூரி வரை சாலைகளில் மழைநீர் தேங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு ஏற்று கொண்டார்.
    • வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில்

    கரூர்

    வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருச்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஓராண்டு நடைபயணம் நிறைவு பேரணி நடைபெற்றது
    • காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது

    கரூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் பேரணி நடந்தது.

    எம்.பி ஜோதிமணி தலைமை தாங்கினார். மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், நகரத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோகுலே, சண்முகம், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் முனீஸ்வரன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், மலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×