என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகடிவதை தடுப்பு - காவலர் அமைப்பு தொடக்க விழா
    X

    பகடிவதை தடுப்பு - காவலர் அமைப்பு தொடக்க விழா

    • புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரியில்பகடிவதை தடுப்பு - காவலர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது
    • பெண்கள்‌‌ மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகடிவதை தடுப்பு மற்றும் காவலர் அமைப்பு துவக்கவிழா நடைபெற்றது. துவக்க விழாவிற்கு அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சாருமதி விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை ஒருங்கிணைப்பாளர்மேனகா அறிமுகம் செய்துவைத்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, உதவி ஆய்வாளர் முத்துமணி , சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் தலைமை காவலர் சாந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கங்களை விரிவாக எடுத்துக்கூறினாகள். இவ்விழாவில் துணை முதல்வர், கலைப்புலத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பகடிவதை மற்றும் காவலர் அமைப்பு' ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். முடிவில் இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி நதிமலர் நன்றி கூறினார்.

    Next Story
    ×