என் மலர்
கரூர்
- எல்லமேடு பகுதியில் கல்குவாரி அமைக்க வலியுறுத்தி கருத்து கேட்பு கூட்டம்
- விதியை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, நடந்தை பகுதியில் புதிதாக தனியார் நிறுவனம் ஒன்று 12 ஏக்கர் பரப்பில் கிராவல் குவாரி மற்றும் சாதாரண கல் குவாரி திட்டத்தினை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதற்கான கருத்து கேட்பு கூட்டம் க.பரமத்தி அருகே உள்ள எல்லமேடு கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். கருத்துக்கணிப்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் , அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெருமக்கள் கலந்து கொண்டு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதில் ஒரு சில ஊர் பொதுமக்கள் கல்குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் பேசினார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக அலுவலமான முகிலன் பேசும்போது,
இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்கும் போது இரவு பகலாக அதிக தன்மை கொண்ட வெடிகளை வைத்து கற்களை உடைக்கும் போது அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்படும், வீடுகள் பாதிக்கப்படும். அதேபோல் இரவு,பகலாக வெடிக்கப்படும் வெடிச் சத்ததால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். கல்குவாரிகள் குடியிருப்பு பகுதி அருகே செயல்படக் கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர் .கல்குவாரிக்கு ஆதரவாக ஒரு சிலர் மட்டும் கல்குவாரியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை தமிழக அரசிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குந்தாணி பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம் (வயது 73)
- வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணி பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு திடீர் ரெய்டு நடத்தி, பல்வேறு வகையான புகையிலை வகைகளை கைப்பற்றி, பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடை வியாபாரியான குந்தாணி பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம் (வயது 73) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், காருடையாம்பாளையம், பாலமலை, பவுத்திரம், குப்பம் ,தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிரசர்கள், கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்ற. இங்கிருந்து ஜல்லிக் கற்கள், சம்பட்டி கற்கள், அரளை கற்கள், செயற்கை மணல்கள் ஆகியவற்றை லாரிகள் ஏற்றி செல்கின்றன. கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு இந்த லாரிகள் செல்கின்றன.
இவ்வாறு செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமான ஜல்லி மற்றும் கிரஷர்கள் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் இந்த லாரிகளுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து ஜல்லி கற்களும், மணல்களும் சாலைகளிலேயே சிதறி விழுகிறது.
சாலையில் சிதறி கிடப்பதால், அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லாரிகள் பர்மிட் இல்லாமல் இயக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை, கனிம வளத்துறை, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், அதிகவேகமாக செல்லும் லாரிகள், பர்மிட் இல்லாத லாரிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.8.44லட்சத்துக்கு விற்பனை
- 399 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது.
வேலாயுதம் பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 116.49 குவிண்டால் எடை கொண்ட 399 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86, குறைந்தபட்ச விலையாக ரூ.63.13, சராசரி விலையாக ரூ.84.30 என ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கும், தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கும், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான் , செங்கல் மலை ஈஸ்வரன் கோவில்,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது
- ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார்.
வேலாயுதபாளையம்:
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரூபா தலை நசுங்கிய நிலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலாயுதம்பாளையம்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு நித்யா தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதை எடுத்து நித்யா(28) அவரது கணவர் கதிர்வேல் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான நித்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;-
எனது கணவர் இவர் ஈரோடு-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை வைத்துள்ளார்.
ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார். இதனை எனது கணவரிடம் கூறினேன்.
பின்னர் நகைக்கு ஆசைப்பட்டு ரூபாவை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த ரூபாவிடம் பவுத்திரம் பாலமலை முருகன் கோவிலுக்கு போகலாம் என நைசாக அழைத்தேன். அவரும் என் பேச்சை தட்டாமல் வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஏற்கனவே தயாராக இருந்த எனது கணவர் வந்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வைத்து நானும் கணவரும் ரூபாவின் கழுத்தை நெரித்து தலையில் கல்லை வைத்து நசுக்கி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தோம்.போலீசை திசை திருப்புவதற்காக அவரது களைந்து அரை நிர்வாணமாக்கி விட்டு தப்பிச் சென்றோம். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்கத்தின் தொடக்க விழா சர்.சி.வி.ராமன் அரங்கத்தில் நடைபெற்றது.
துறைத் தலைவர் மோகன்பிரசாத் வரவேற்றார். கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரி செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், சிறப்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக, சென்னை எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட். லிமிடெட் திட்டம் மற்றும் திட்டமிடல் தலைவர் இளங்கோ கலந்து கொண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்க விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் எலக்ட்ரிக் வாகனம் 2025 மற்றும் அதன் பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.சங்க ஆலோசகர் வினோத்குமார், 2023-24 கல்வியாண்டின் சங்க அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தற்காலிக செயல்பாடுகளை அறிவித்தார். முடிவில் சங்க செயலாளரும் , இறுதியாண்டு பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவருமான பாலமுருகன் நன்றி கூறினார் .
- தளவாபாளையம் பகுதியில் திடீர் மின்தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
- நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம், தோட்டக்குறிச்சி புகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தளவாபாளையம் பீடரில் உள்ள வடிவேலம்பாளையம் அருகில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள மின்சார இன்ஸ்டலேட் ஒன்று பழுதானது . இதனால் திடீரென தளவாபாளையம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின்சார வயரை சீரமைப்பதில் பணிகள் தாமதப்பட்டது . அதேபோல் மின்சார இன்வேட்டர் பழுதானையும் உடனடியாக சரி செய்ய தொடர்ந்து இரவு நேரமாகியும் பின் சப்ளை இல்லாததால் மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள், பேக்கரி கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும்,வியாபார நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். அதேபோல் பொதுமக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர் . இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மின்வாரிய பணியாளர்கள் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயர்களையும் இன் வேட்டர்களையும் சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். இந்நிலையில் மின்சார வாரிய பணியாளர்கள் இரவில் வேலை செய்து கொண்டு இருந்தபோது அந்தப் பகுதிக்கு 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வேகமாக வந்துள்ளது. அதை பார்த்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர்.
- தவுட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை சிகிச்சையில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இவர் யார் ? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (61). விவசாயி . இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைத்திடுமாறி சரவணன் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சரவணனை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கோவை ரத்தினபுரி அருணா அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 53.98 1/2 குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.39-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 18ஆயிரத்து 26-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 511.23 குவிண்டால் எடை கொண்ட 1079-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.71-க்கும், சராசரி விலையாக ரூ.77.19-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.70.19-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து31ஆயிரத்து 11-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38லட்சத்து49 ஆயிரத்து 37-க்கு விற்பனையானது.
- வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
- இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான, நொய்யல், மரவாபாளையம், புங்கோடை ,சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப் பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது புகளூர் பகுதியில் ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய் தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என்ற பல்தொவேறு காரணங்களால் வெற்றிலை விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதேபோல் கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விற்பனை குறைந்துள்ளதால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை பாதுகாக்க இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை. பலமுறை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கிடங்கு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






