என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    கரூர் மாவட்டத்தில்அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், காருடையாம்பாளையம், பாலமலை, பவுத்திரம், குப்பம் ,தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிரசர்கள், கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்ற. இங்கிருந்து ஜல்லிக் கற்கள், சம்பட்டி கற்கள், அரளை கற்கள், செயற்கை மணல்கள் ஆகியவற்றை லாரிகள் ஏற்றி செல்கின்றன. கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு இந்த லாரிகள் செல்கின்றன.

    இவ்வாறு செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமான ஜல்லி மற்றும் கிரஷர்கள் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் இந்த லாரிகளுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து ஜல்லி கற்களும், மணல்களும் சாலைகளிலேயே சிதறி விழுகிறது.

    சாலையில் சிதறி கிடப்பதால், அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லாரிகள் பர்மிட் இல்லாமல் இயக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை, கனிம வளத்துறை, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், அதிகவேகமாக செல்லும் லாரிகள், பர்மிட் இல்லாத லாரிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×