என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்குவாரி அமைக்க வலியுறுத்தி கருத்து கேட்பு கூட்டம்
- எல்லமேடு பகுதியில் கல்குவாரி அமைக்க வலியுறுத்தி கருத்து கேட்பு கூட்டம்
- விதியை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, நடந்தை பகுதியில் புதிதாக தனியார் நிறுவனம் ஒன்று 12 ஏக்கர் பரப்பில் கிராவல் குவாரி மற்றும் சாதாரண கல் குவாரி திட்டத்தினை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதற்கான கருத்து கேட்பு கூட்டம் க.பரமத்தி அருகே உள்ள எல்லமேடு கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். கருத்துக்கணிப்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் , அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெருமக்கள் கலந்து கொண்டு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதில் ஒரு சில ஊர் பொதுமக்கள் கல்குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் பேசினார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக அலுவலமான முகிலன் பேசும்போது,
இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்கும் போது இரவு பகலாக அதிக தன்மை கொண்ட வெடிகளை வைத்து கற்களை உடைக்கும் போது அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்படும், வீடுகள் பாதிக்கப்படும். அதேபோல் இரவு,பகலாக வெடிக்கப்படும் வெடிச் சத்ததால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். கல்குவாரிகள் குடியிருப்பு பகுதி அருகே செயல்படக் கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர் .கல்குவாரிக்கு ஆதரவாக ஒரு சிலர் மட்டும் கல்குவாரியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை தமிழக அரசிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






