என் மலர்
கரூர்
- வெள்ளிங்கிரி மலைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
சித்ரா பௌணர்மியையொட்டி கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் ஏறி சுயம்பு லிங்கத்த வழிபாடு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ெசல்வார்கள். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (வயது 40). இவர் வெள்ளிங்கிரி மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார். ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் இருந்த உதவி மருத்துவர் குமாரை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் கட்டிட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
- ரூ.25 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது
கரூர்,
கரூர் தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து பொது சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகமாகி வருவதால் கூடுதல் கட்டிடம் கட்ட ேவண்டும் என ெபாதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனா். இதையடுத்து 2021-22-ம் ஆண்டு நமக்கு நாமே திட்ட நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில், மருத்துவர் அறை, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, 4 கழிவறை கட்ட பணிகள் ெதாடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதையடுத்து புதிய கட்டிட பணிகளை தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார், உதவி திட்ட இயக்குனர் முத்துப்பாண்டியன், உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
- கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
- வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற வாலிபரை மதுவிலக்கு போலீ சார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள சணப்பிரட்டி ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருர் மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குசென்ற போலீசார், அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது, இதே பகுதியை சேர்ந்த அரவிந்த்(வயது 21) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்துவிற்பனை செய்து வந்தது தெரியவந் தது. இதனையடுத்து, வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் ஏற்பாடு
- பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அழைப்பு
கரூர்,
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் 2023-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வருகிற 8-ந் தேதி இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- 16 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன
- 35 பேருக்கு ரூ.4.37 லட்சம் மொபைல் போன் வழங்கப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். அதில் 16 தொழில் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. பிறகு, நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிரபு சங்கர் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் மொபைல் போன்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா உள்பட பலர் பங்கேற்றனர்.
- போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்:
கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் தலைமையிலான போலீசார் ஆத்தூர் பிரிவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கரூர் ராமானுஜா நகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 31), வடிவேல் நகரை சேர்ந்த பிரவீன் (25) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
- முகாமில் பல்வேறு பரிசோதனைகளை செய்யபட்டது
- கரூரில் மருத்துவ முகாம் நடந்தது.
கரூர் :
கரூர் நொய்யல் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
- 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
- விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர்:
கரூர் வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதேபோல காகிதபுரம், ஓம் சக்தி நகர், ஈ.ஐ.டி. பாரி பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வெள்ளக்கோவிலுக்கு சென்றுபோது விபரீதம்
- பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்
கரூர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிங்கால்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது23). இவர் வெள்ளக்கோவிலில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் ராஜராஜனை பின்னால் அமர வைத்து வெள்ளக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சித்தலவாய் கடை வீதி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் ராஜராஜன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் ராஜராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிக்கம்பட்டி டிராக்டர் டிரைவர் முருகேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
- வானவில் மன்றம் சார்பில் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டம், பள்ளி கல்வித்துறையின், அறிவியல் இயக்கம் வானவில் மன்றம் சார்பில் கிருஷ்ணராயபுரம் பகவதி அம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. வட்டார தொடக்கக்கல்வி அலுவலர்கள் செந்தில்குமாரி, மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சி எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்ற தலைப்பில் தொடர்ந்து 15 நாள் நடைபெற உள்ளது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு அறிவியலுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பினை குறித்து விளக்கப்படுகிறது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, சுமதி , ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, செந்தாமரைச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் ரேகா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- அன்றைய தினமே பணி நியமன ஆணை
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஜ.டி.ஜ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணிநியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி்கான பதிவும் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பைக் மோதி வியாபாரி பலியானார்
- பேப்பர் வியாபாரம் செய்து வந்தார்.
கரூர்:
குளித்தலை அடுத்த வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). இவர் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் மேல பஞ்சப்பட்டி கீரனுார் ரோட்டில் தனியார் கார்மென்ட்ஸ் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பெரிய சேங்கல் தெற்கு தெருவை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






