என் மலர்tooltip icon

    கரூர்

    • ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறக்கப்பட்டது
    • ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது

    கரூர்,

    கரூர் தாந்தோணிமலை ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு விடுதியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இந்த விடுதியில், 7 மாணவர்கள் அறை, ஒரு காப்பாளர் அறை, ஒரு உணவருந்தும் அறை, ஒரு பொருள் வைக்கும் அறை, ஒரு எரிபொருள் அறை, ஒரு சமையலறை, 12 குளியலறை, 24 கழிவறை வசதி உள்ளது. இதேபோல் கடவூரில் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தாஜூதீன், திருச்சி கோட்ட தாட்கோ உதவி செயற்பொறியாளர் அருண்குமார், தனி தாசில்தார் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • தகராறை விலக்கி விட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல்

    கரூர்,

    கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது சகோதரர் ஹரிஷ்குமாருக்கும், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் அந்த தகராறை விலக்கி விட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாபாகோவில் அருகே அருண்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயகிருஷ்ணன், முருகன் (42), பாலன் (55) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர்.இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மாயகிருஷ்ணன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பாலனை தேடி வருகின்றனர்.

    • கரூர்அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
    • 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1999-2002ம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து உரை யாடியதோடு, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில், கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் தாசில்தார், வழக்கறிஞர் போன்ற பதவிகளில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    • நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியுடன் கரூரில் பேட்டி
    • ராவண கோட்டம் பார்க்க வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்

    கரூர்,

    "என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு,'' என, நடிகர் சாந்தனு தெரிவித்தார். கரூரில் எல்லோரோ தியேட்டரில், ராவணகோட்டம் படம் திரையிடப்பட்டுள்ளது. அதில், கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சாந்தனு நேற்று மதியம், தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார். சிறிது நேரம் படம் பார்த்த சாந்தனு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து கலந்துரையாடினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ராவண கோட்டம் படத்துக்கு, ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களை நேரில் சந்தித்து, பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கு சென்றாலும், என் தந்தை பாக்கியராஜ் குறித்துதான், ரசிகர்கள் கேட்கின்றனர். அவர் கதை எழுதி, டைரக்ஷன் செய்து நடித்தார். என் பாதை வேறு, அவர் பாதை வேறு. அடுத்ததாக, கிரிக்கெட் தொடர்பான படத்தில் உள்ளேன். நடிகர் விஜய்யுடன் நடித்ததில் நடிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், விஜய்யுடன் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் கடும் அவதி
    • அக்னி நட்சத்திரம் எப்போது முடிவடையும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விட கோடைவெயில் உச்சத் தில் இருந்ததால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு விட்டனர். கடந்த இரண்டுவாரங்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தது. கரூரிலும் இதன் தாக்கம் காரணமாக பரவலாகமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான நிலை நிலவியது. இதனால், அனைத்து தரப்பினர்களும் ஓரளவு நிம்மதியடைந்தனர்.இந்நிலையில், மோக்கா புயல் சின்னம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் ஓரளவு லேசான அளவில் மழை பெய்தது. அதற்கு பிறகு சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மேலும், மோக்கா புயல், தமிழகத்தில் இருந்து காற்றின் ஈரப்பதத்தை மாற்றி அமைத்துச் சென்று விட்டதால், சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததோடு, இரவு முழுதும், வெயில் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தியது. எந்த நாளும் இல்லாத அளவுக்கு நேற்று காலை முதல் இரவு வரை வெயில் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பி னர்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து விட்டனர் என் பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில், அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும் நிலையில், புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்த நிலையில், திரும்பவும் கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருவதால் எப்போது, இந்த அக்னி நட்சத்திர வெயில் முடிவ டையும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

    • மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49) கிரஷர் தொழிலாளி. இவர், டி.வி. எஸ்., மொபட்டில், மத்திபாளையம் அருகே க.பரமத்தி கந்தம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக திருவாரூரை சேர்ந்த முத்து குமரேசன் (39) என்பவர் ஓட்டி சென்ற லாரி, மொபட் மீது மோதியது. அதில், சம்பவ இடத்தில் வைரவன் உயிரிழந்தார்.இதையடுத்து, வைரவனின் மனைவி தமிழரசி கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு
    • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்,

    கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற வரும், 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில்... பண்பாட்டுத்துறையின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக, தமிழ கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பர தநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயி லாட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசி லம்பாட்டம் (வீரக்கலை) ஆகிய கலைஞர்கள் விண்ணப் பிக்கலாம்.தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலைமன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள், இந்த விருதிற்கு விண் ணப்பம் செய்யக்கூடாது. மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து வரும், 29க்குள், உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப் பள்ளி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

    • க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செட்டியபட்டியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49). இவர் தற்போது க. பரமத்தி அருகே உள்ள தனியார் கல் குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் கரூர் அருகே உள்ள கோவிந்தம் பாளையத்தில் குடியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பவுத்திரம் மேடு அருகே எதிரே அந்த வழியாக வந்த ஒரு லாரி வைரவன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த வைரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வைரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வைரவன் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
    • இந்தநிலையில் நேற்று முன்தினம் நிகிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    கரூர்:

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, வெள்ளைப்பாறை கிராமத்தை ேசர்ந்தவர் சந்திரசேகர் (வயது 21). இவரது மனைவி நிகிதா (19). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிகிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் நிகிதாவை சிகிச்சைக்காக கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.ஆனால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதையடுத்து சந்திரசேகர் தனது மனைவி நிகிதா மற்றும் மாமியார் சித்ரா ஆகியோரை தனது காரில் அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.காரை சந்திரசேகர் ஓட்டினார். நிகிதாவும், சித்ராவும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

    தோகைமலை அருகே உள்ள வெள்ளைகுளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைேயாரத்தில் உள்ள வேப்பமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சந்திரசேகர், நிகிதா, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், நிகிதாவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நிகிதா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சித்ரா, சந்திரசேகர் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து நிகிதாவின் தந்தை காளீஸ்வரன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூர் உழவர் சந்தையில் ரூ.48 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது.

    கரூர்:

    கரூர் உழவர்சந்தை பழைய பஸ்நிலைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. கரூர் உழவர்சந்தை 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகள் வருகை புரிவார்கள்.

    அப்போது 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் உழவர்சந்தையை மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலக மேற்கூரை, உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கரூர் உழவர்சந்தையில் தற்போது ரூ.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடைகள், அலுவலகங்கள் சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் இப்பணிகள் 1 மாதத்திற்கு நடைபெறும் எனவும், அதுவரை கரூர் உழவர்சந்தை தினமும் காலை 8 மணி வரைதான் நடைபெறும் எனவும் தெரிவித்தார். கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணியுடன் விற்பனை முடிவடையும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உழவர்சந்தை வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு பலகை நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்தது.

    • குளித்தலையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்று படுகையில் உள்ள சுடுகாடு அருகே நேற்று முன்தினம் சுமார் 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இறந்து கிடந்தவர் பிச்சை (வயது 82) என்பதும், அவர் குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியில் அவரது மகன் பெரியசாமி என்பவருடன் வசித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் வெள்ளியணை பகுதியில் உள்ள தனது மற்றொரு மகன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா நடைபெற்றது
    • இன்று கம்பம் வழங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    கரூர்,

    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.முன்னதாக மாரியம்மன் மூப்பன் வகையறாவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் கனவில் மூன்று நாட்களுக்கு முன்பு அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முக்குலை கம்பம் பாலம்மாள்புரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு பாலம்மாள் புரத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் கம்பத்திற்கு சிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்று பின்னர் கம்பம் ஊர்வலம் தொடங்கியது. வேலம்மாள் புரத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது ஐந்து ரோடு வழியாக ஜவகர் பஜார் அடைந்து பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது கோவிலில் அறங்காவலர் முத்துக்குமாரிடம் முக்கலை கம்பம் மூக்கன் வகையறாக்களால் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் கோவிலில் கம்பம் செதுக்கப்பட்டு பின்னர் மாலையில் அமராவதி ஆற்றில் சிறப்பு ஆராதனை நடைபெற்று தொடர்ந்து கம்பம் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு கோவில் முன்பாக நடப்பட்டது. கோவில் முன்பாக கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றிய வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் விழா நடக்கிறது. இன்று நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×