என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
    • காகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் ஆல யத்தின் 54-வது ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வருகிற 13-ந்தேதி திங்கட் கிழமை காலை 5 மணிக்கு புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மகாகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு பால முருகனாக உருகாப்பு நடை பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆறு படை மகிமை என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நடை பெறுகிறது. இரவு 8 மணிக்கு ஓவியப்போட்டியும், 8.30 மணிக்கு மாபெரும் வண்ணக் கோலப்போட்டி நடைபெறு கிறது. இதில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசாக 3001, 2-ம் பரிசாக 2001, 3-ம் பரிசாக 1001 வழங்கப்படுகிறது.

    14-ந்தேதி செவ்வாய்க் கிழமை 2-ம் நாள் உழவர் விழாவாக நடைபெறு கிறது. அன்று இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய பூஜையும், 8 மணிக்கு மேஜிக் ஷோ நிகழ்ச்சியும், இசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. 15-ந்தேதி புதன் கிழமை பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு 7 மணிக்கு சொற்பொழிவும், 8 மணிக்கு மாபெரும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. 16-ந்தேதி வியாழக்கிழ மை காலை 6.30 மணி முதல் பூஜைகளும் ஆறுமுகனாக உரு காப்பும் நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு பாரதப்போருக்கு யார் காரணம் என்று தலைப்பில் விசாரணை மன்றம் நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    17-ந்தேதி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொ டர்ந்து சுவாமி போர்க் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி என். விக்டோரியா கவுரி முதல் திருவிளக்கு தீபம் ஏற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மகளிர் மாநாடும் நடைபெறுகிறது.

    18-ம் தேதி சனிக்கிழமை காலை 6-ம் நாள் கந்த சஷ்டி விழா, காலை 6.30 மணிக்கு உதய கால பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. 11 மணிக்கு கும்பாபி ஷேகமும், பகல் 12 மணிக்கு பெருவிளை அருள்மிகு சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியி டமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும்

    1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹா ரத்திற்குப் புறப் படுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. அப்போது வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 8.30 மணிக்கு தொழிலதி பர் கேட்சன் தலைமையில் போட்டி சிலம்பம் நிகழ்ச்சி ஆகியவையும் நடக்

    கிறது. 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 7-ம் நாள் திருக்கல்யாண விழாவாக நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு அன்னாபிஷே கமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும், 1 மணிக்கு அன்னதா னமும் வழங்கப் படுகிறது. அன்று மணக் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாபிஷேக மும் அதனை தொடர்ந்து பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராதனையும் நடக்கி றது.

    இரவு 8.45 மணிக்கு மணிமகுடம் என்ற சமூக நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் முருக னுக்கு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை, இன்னிசை கச்சேரி, சஷ்டி கவசம் வாசித்தல் ஆகி யவை நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் முன்பு பந்தல் போடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா ஏற்பாடுகளை கௌரவத் தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோ சகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் இராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கௌரவத் தலைவர் அருள் குமரன், உபத்தலைவர் இராதாகிருஷ்ணன் இணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல்முருகன், மண்டப பொறுப்பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல் சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன.
    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3 கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    வழக்கம்போல இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தீபாவளி பண்டிகை காரணமாக குறைவான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி தூரத்துக்கு கடல் "திடீர்" என்று உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன. வழக்கமாக சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் உள்வாங்கி இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போடுவதற்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.

    சில இடங்களில் முட்டளவு தண்ணீரும், சில இடங்களில் கரண்டை கால் அளவுக்கு மட்டுமே கடலில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதற்கு அச்சம் அடைந்தனர். அதையும் மீறி கடலில் இறங்கி நின்ற சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.

    ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இருப்பினும் வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் வழக்கம்போல் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்களும் அதிக அளவில் மீன்களை பிடித்துக் கொண்டு வந்தனர்.

    • குழித்துறை வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக ரெயில்வே தண்டவாளங்களில் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இரணியல், பள்ளியாடி பகுதிகளில் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டு வருவதையடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குழித்துறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் குழித்துறை-பாறசாலை இடையே தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தையொட்டி நின்ற மரம் ஒன்று முறிந்து தண்டவாளத்தின் மின் வயர் மீது விழுந்ததில் மின் வயர் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணி நடந்தது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு சீரானது. இதைத்தொடர்ந்து ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.20 மணிக்கு ரெயில் வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதேபோல் புனலூரில் இருந்து மதுரை சென்ற பாசஞ்சர் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 4 மணி நேரத்துக்கு மேலாக அந்த ரெயில் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இரவு 10.35 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும் புனலூர் ரெயில் அதிகாலை 2.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    பின்னர் இங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இன்று 2 மணி நேரம் தாமதமாக ரெயில் மதுரை சென்றடைந்தது. மதுரை செல்லும் ரெயிலுக்காக குழித்துறை, இரணியல், நாகர்கோவில் ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    • லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர்.
    • அபராத தொகை கட்டிய பின்னர் வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    களியக்காவிளை:

    கேரள-தமிழக எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகனங்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு கேரளாவில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை உள்ளது. இந்தச் செயல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அந்த வழியே செல்பவர்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக் கொண்டு சென்று வருகின்றனர். எனவே கழிவுகள் வரும் லாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கேரள கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து களியக்காவிளை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர். ஆனால் லாரி பக்கத்தில் பொதுமக்களை செல்ல விடாமல், அதன் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை செய்த போது, கோழி கழிவுகளை கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு கோழிக்கழிவுகளை கொண்டு வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அபராத தொகை கட்டிய பின்னர் அந்த வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    • 12-ந்தேதி நடக்கிறது
    • மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

    கன்னியாகுமரி, நவ.9-

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இங்கு ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானம் திருப்பதியை போன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • குமரி மாவட்ட முந்திரி தொழிலாளர் சங்கத்தினர் அமைச்சர் மனோதங்கராஜிடம் வலியுறுத்தல்
    • 2 ஆண்டு களுக்கு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

    தக்கலை, நவ.9-

    குமரி மாவட்ட முந்திரி தொழிற்சாலை உரிமை யாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரெஜின் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கையான 430 சதம் நிலைக்கட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும்.

    பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும் . கூரைக்கு மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணம் முழுமையும் ரத்து செய்திட வேண்டும்.மின்சார வாரியத்தால் தவறாக அவசர கோணத் தில் தயாரிக்கப்பட்டு தொழில் துறையினரின் மேல் திணிக்கப்பட்ட கட்டணத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும்.தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டு களுக்கு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை கள் நிறைவேற்றி தொழில் புரிவதற்கும், தொழில்களை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தமிழ்நாட்டின் குறு சிறு தொழில்கள் பாதுகாக்கபட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இரணியல், நவ.9-

    கருங்கல், திங்கள் நகர், இரணியல், தோட்டியோடு வரை உள்ள நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலை யில் இருந்து வந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கிய பின்னர் இந்தச் சாலைகள் மேலும் மோச மடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் பல்லாங் குழி சாலை யாக உள்ளது. இரணி யல் மேலத்தெரு, ஆமத்தான் பொத்தை, காற்றாடி மூடு ஆகிய இடங்களில் ஆங்காங்கே மரணக்குழிகள் காணப்படுகிறது.

    இந்த நிலையில் கருங்கலில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ், திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் வந்த போது, எதிரே வந்த லாரிக்கு வழி விட முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் சரிந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அதில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் மோசமான நிலையில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, கருங்கல், திங்கள் நகர், இரணியல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ராஜாவை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்த கோட்டார் பகுதியில் அப்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தேர்தல் விதிமுறை அமலில் இருந்த நிலையில் நிர்வாகிகள் திரண்டதால் எஸ்.ஏ.அசோகன் உட்பட 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.ஏ.அசோகன் மற்றும் கிருஷ்ணதாஸ், ஆர்.ஜே.கே. திலக், ஜெயசீலன், டாரதி சாம்சன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    • பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில், நவ 9-

    தேசிய சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 9-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது.

    இதனையொட்டி சட்டப் பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு, அதன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவருமான கார்த்திகேயன் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய், குடும்ப நல நீதிபதி சுதாகர், முதன்மை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளருமான சாந்தினி, சார்பு நீதிபதிகள் அசன் முகமது, சிவசக்தி, சுந்தர கமலேஷ் மார்த்தாண்டம், தாயுமானவர், கீர்த்திகா, மணிமேகலை, நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவர் பால ஜனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பிரச்சார வாகனம் குமரி மாவட்டத்தில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்தியா முழுவதும் வருடம் தோறும் 4 முறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசமாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்
    • நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாளை 10-ந்தேதி தொடங்குகிறது.

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை அமைப்பாளர் மாணிக்கராஜா வரவேற்று பேசுகிறார் .

    ஒன்றிய செயலாளர் பாபு,கன்னியாகுமரி பேரூராட்சிதலைவர் குமரி ஸ்டீபன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி, துணைஅமைப்புச் செயலாளர் ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டியில் 47 அணிகள் பங்கேற்கிறது.

    போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 கேடயமும் இரண்டாவது பரிசாகரூ. 15000 கேடயமும் மூன்றாம் பரிசாகரூ. பத்தாயிரம் கேடயமும் நான்காவது பரிசாக ஐந்தாயிரம் கேட யமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்காக கடைவீதிகளுக்கு வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டி கைக்காக புத்தம் புது மாடல்களில் சிறுவர் களுக்கான புத்தாடைகள் கடைகளுக்கு வந்திருந்தது. அதை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் வடசேரி, செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள துணிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளியை குதூகலபடுத்தும் வகையில் புத்தம் புது மாடல்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இரவு வான வேடிக்கைகள் 120 ஷாட் முதல் 1000 ஷார்ட் வரை இந்த முறை விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆயிரம் ஷார்ட் வெடிகள் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    லைசென்சு இல்லாமல் யாராவது பட்டாசு விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் தீயணைப்புத்துறை சார்பிலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. புத்தம் புது வகையான இனிப்பு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பால்கோவா ஸ்வீட் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளையும் வாங்கி சென்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி யதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி யுள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ்நிலையத்தில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தg; gட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டாறு, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், அஞ்சு கிராமம், களியக்காவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது
    • நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

    குளச்சல் :

    கேரள முதலி சி.எஸ்.ஐ. முன்னேற்ற சங்க 32-வது ஆண்டு விழா குளச்சல் நெசவாளர் தெரு ஹாக்கர் புரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்தது. சபை ஊழியர் ஷெர்லின் சஜிதா நெல்சன் ஜெபம் செய்தார். சங்க தலைவர் ஜாண் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் குணசிங் வேதநாயகம் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் ராஜா வரவேற்றா.பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். செயல் மற்றும் கல்விக்குழு கன்வீனர் பெஞ்சமின் கல்விக்குழு அறிக்கை வாசித்தார். பேராய இளையோர் கரிசனைத்துறை இயக்குனர் ரெஞ்சித் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். சிறப்பு விருந்தினரை முன்னாள் பொருளாளர் சுந்தர்ராஜ் அறிமுகப்படுத்தி பேசினார்.

    விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற நாகர்கோவில் பல்கலைக்கழக இணை பொறியியல் கல்லூரி பேராசிரியர் அருண் பிரேம் சாந்த், பேராயத்தில் அருள் பொளிவு பெற்ற போதகர் சாமுவேல் ராஜன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பேராசிரியர் டாக்டர் புஷ்பராஜ், சங்க ஆலோசகர் மணி ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் டேவிட் ஜோன்ஸ் நன்றி கூறினார். போதகர் ரெஞ்சித் சுதிர் நிறைவு ஜெபம் செய்தார். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் சபைக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×