களியக்காவிளை அருகே சபை போதகர் மர்மச்சாவு

போலீசார் விசாரணைசபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
களியக்காவிளை அருகே சபை போதகர் மர்மச்சாவு
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சோபனம். இவர் கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். திருமணமாகாத இவர், பொன்னப்பநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று காலை சோபனம் வீட்டுக்கு அவரது தம்பி ரசல்ராஜ் வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால், அவர் வெளியில் நின்று சத்தம் கொடுத்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரசல் ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது அங்கு சோபனம் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித் துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரசல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com