என் மலர்
கன்னியாகுமரி
- கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவரது இ-மெயிலுக்கு விமான நிலையத்தில் வேலை தொடர்பான அழைப்பு வந்திருந்தது. அதில் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட செல்போனில் பேசினார். அப்போது சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார்.
அப்போது விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பட்டதாரி வாலிபர் தனது சகோதரருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்தினார். ரூ.2½ கோடி வரை பணம் செலுத்தியிருந்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு தான் இவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக பட்டதாரி வாலிபர் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் சூப்பிரண்டு தேவராணி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பட்டதாரி வாலிபர் ஏமாற்றப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தியபோது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 45), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்து அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று கேரளாவுக்கு விரைந்து சென்று ரஞ்சித், அம்பிகா இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரகனி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பரமசிவம் கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பிறகும் அவரது உடல்நிலை சரியாக ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்
- அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார்விளை கிடங்கில் ஒப்படைக்கபடும்
கன்னியாகுமரி :
தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் இருந்த போது இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு கார் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.
வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்ற போது ஆலஞ்சி, கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட விழுந்தயம்பலம், கிள்ளியூர், தொலையாவட்டம், வழியாக விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட கொல்லஞ்சி, இலவு விளை, விரிகோடு மற்றும் அதன் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கிடையே உள்ள உள் சாலைகள் வழியாக வந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கடந்து மார்த்தாண்டம் அருகே உள்ள கீழக்காஞ்சிரங்கோடு என்னும் ஊரில் வைத்து வழிமறித்த போது அந்த வாகனத்தினை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்த பெண் ஒருவரும் சேர்ந்து வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருக்கைகள் இல்லாமல் நூதன முறையில் ரகசிய அறைகள் அமைத்து, மறைத்து வைத்திருந்த சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் அரிசியுடன் வாகனத்தினை பறிமுதல் செய்து, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கபடும். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
- ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு கடலரிப்பு தடுப்பு பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
- குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் ஆய்வில் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி அவசரகால நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு கடலரிப்பு தடுப்பு பணிகள் துவங்கியது. அந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.
பங்குத் தந்தை ராஜு, குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
- இன்று மாலை இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு
கன்னியாகுமரி :
வில்லுக்குறி அருகே உள்ள கீழ பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மகன் பாபு (வயது 46), பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருடன் அவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38) ஆகியோரும் வசித்து வந்தனர். சகோதரிகள் 2 பேருக்கும் திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கரா மன், இரணியல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபுவும், ஸ்ரீதேவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் உஷா பார்வதி விஷமருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாபு மற்றும் அவரது சகோதரிகள் உடலை போலீசார் யாரிடம் ஒப்ப டைப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட னர்.
அவரது உறவினர்கள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை யில் திடீர் திருப்பமாக பாபுவிற்கு திருமணமாகி இருப்பது தெரியவந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதையடுத்து போலீசார் பாபுவின் மனைவி எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாபுவின் மனைவியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் பாபு உட்பட அவரின் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை தெரிவித்தனர். உடலை ஒப்படைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்ட னர். இறந்தவர்கள் உடலை இறுதிச் சடங்கு செய்ய பாபுவின் மனைவி ஒப்புக் கொண்டார். போலீசார் உடல் களை பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று 3 பேர் உடலும் பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அவரது உறவினர்கள் உதவியுடன் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
- காலை, மாலையில் கார். இரு சக்கர வாகனங்களில் டிப் டாப் வாலிபர்கள் வந்து நீண்ட நேரம் கழித்து செல்வது வாடிக்கை
- அந்த வீட்டில் 3 பெண்கள், 2 வாலிபர்கள் அரைகுறை ஆடையோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
கன்னியாகுமரி :
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் மேலூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் 2 குழந்தைகளோடு வாட கைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
அவரது வீட்டுக்கு தினசரி காலை, மாலை கார்களில் இரு சக்கர வாகனங்களில் டிப் டாப் வாலிபர்கள் வந்து நீண்ட நேரம் கழித்து செல்வது வாடிக்கை. இதை அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் கண்காணித்து வந்தனர்.
இதுகுறித்து ரகசிய தகவல் தனிப்பிரிவுக்கு தகவல் வந்தது. தனிப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்து கண்காணித்து வந்தனர். நேற்று மாலையில் தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காரிலும், பைக்கிலும் வாலிபர்கள் வந்த வண்ணம் இருந்தது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்தபோது அந்த வீட்டில் 3 பெண்கள், 2 வாலிபர்கள் அரைகுறை ஆடையோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், பணகுடியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவை சேர்ந்த மஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் 2 பேர் சென்னையை சேர்ந்த அழகிய ஆவார்கள். போலீசார் பாலசுப்ரமணியன், மணிகண்டன், மஞ்சுவை கைது செய்தனர். அழகிகள் இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விபச்சார கும்பல் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபச்சாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலசுப்பிர மணியன், மணிகண்டன், மஞ்சு ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளனர். மதுரை, கோவை பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு செல்போனில் தனி லிங் மூலமாக வாலிபர்களுக்கு அழகிகள் படங்களை அனுப்பி கொடுத்து அதற்கான தொகை விவரத்தையும் பேசியுள்ளனர். பின்னர் அந்த வாலிபர்களை வெள்ளமடம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அவர்களை அங்கிருந்து கார் மூலமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் அழைத்து சென்று அழகி களுடன் உல்லாசம் அனுப விக்க வைத்துள்ளனர். இதற்காக ரூ.2000 முதல் ரூ.4000 வரை பெற்றுள்ள னர். மேலும் ஒரு வாரத்துக்கு ஒரு முறை அழகிகளை மாற்றி உள்ளனர். சென்னை, கேரளா மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகளையும் இங்கு வரவழைத்து விபச்சா ரத்தில் ஈடுபடுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபச்சார கும்பலிடமிருந்து போலீசார் சில செல்போன் எண்களையும் கைப்பற்றியுள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய நபர்களின் செல்போன் எண்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.
- பொன்ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர் சாதனை
- நோயாளி கத்தியின்றி ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறந்தார். இந்த ஓட்டையை இருதய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என பல சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சதீஷ்குமார் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மரு.சரவணனை சந்தித்து மருத்துவ ஆலோ சனை பெற்றார். அவர் உணவுக்குழாயில் காமிரா அனுப்பி துல்லிய இருதய படம் எடுக்கும் அதி நவீன கருவி மூலம் ஆராய்ந்து பார்த்து இந்த ஓட்டையை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம் என்று தெரி வித்தார். பிறகு காலில் உள்ள ரத்த குழாயில் சிறு துளையிட்டு அதன்மூலம் ஒரு சாதனம் பொருத்தி இருதய ஓட்டையை நவீன சிகிச்சை மூலம் அடைத்து சாதனை படைத்தார். நோயாளி கத்தியின்றி, ரத்தமின்ற ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
- புதிய முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கான பணிகளை எச். வசந்த குமார் தொடங்கி வைத்திருந்தார்.
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காமராஜர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புதிய முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கான பணிகளை எனது தந்தை அமரர் H. வசந்த குமார் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஐயா காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது. இரவு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் எம்.எஸ்.காமராஜ், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் பங்கேற்பு
- மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பொறுப்புகளை தெளிவுபட விளக்கினார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான் கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பதவி ஏற்பு விழா வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஸ்போர்ட்ஸ் கேப்டன் மாணவர் ஆதில் பெலிக்ஸ் கடவுள் வாழ்த்து கூறினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துசிவம் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விவரித்தார். மாணவி மெலிட்டா விக்டி வரவேற்றார்.
புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாணவர் கூட்டமைப்பு தலைவர்களுக்கு பள்ளித் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் பதவி பட்டைகளை அணிவித்தார். செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பேட்ஜ்களையும் அணிவித்தார்.
பின்பு முதல்வர் பீட்டர் ஆண்டனி புதிதாக பதவியேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் தெளிவுபட விளக்கினார்.
மாணவர் கூட்டமைப்பு தலைவர் லிரிஷ் மற்றும் தலைவி வித்யா சரோஜினி சிறப்புரையாற்றினார்கள். மாணவி ஆம் கிரிஸ்ட் நன்றி கூறினார். ஆசிரியர் ஜெகன் பிரிட்டோ நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர் ஆண்டனி, இடைநிலை கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
- பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). இவர் அருகில் உள்ள பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவரது தோட்டத்தில் விஷ மருந்தை சாப்பிட்டு உயிருக்கு போரா டிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் அவரது மகன் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
- ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எள்ளு விளையை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் (வயது 70).
இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் நேற்று மாலை ராஜாக்கமங்கலம் சந்திப்பில் டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எள்ளுவிளை சந்திப்பு அருகில் வரும் போது நாகர்கோவில் இருந்து வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் ஆறுமுகப்பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன ஆறுமுகபெருமாளுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகப்பெருமாளின் மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிலாங்காலை சேர்ந்த ஆல்வின் (33) என்பவரை தேடி வருகிறார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மேல்விசாரணை செய்து வருகிறார்.
- ஒரு கிலோ இஞ்சி இன்று மார்க்கெட்டில் கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்டது
- மிளகாயின் விலையும் கடந்த ஒரு மாதமாக விலை குறையாமல் உள்ளது. இன்று ரூ.140-க்கு விற்கப்பட்டது
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொருட்களை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வழக்கமாக தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், இஞ்சி வகைகளை கிலோ கணக்கில் வாங்கி வந்த நிலையில் தற்போது கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவற்றின் விலைகள் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது தான் காரணமாகும்.
குறிப்பாக தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக நாகர்கோவில் மார்க்கெட்டு களில் ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று தக்காளி விலை மேலும் ரூ.15 உயர்ந்து ரூ.135-க்கு விற்கப்படு கிறது. இதேபோல் இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிலோ இஞ்சி இன்று மார்க்கெட்டில் கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்டது. பூண்டுவின் விலை ரூ.200-ஐ தொட்டது. சின்ன வெங்காயம் ரூ.200 முதல் 210 வரை விற்பனையானது. மிளகாயின் விலையும் கடந்த ஒரு மாதமாக விலை குறையாமல் உள்ளது. இன்று ரூ.140-க்கு விற்கப்பட்டது. இதேபோல் நாட்டு கத்தரிக்காய் கிலோ ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.60, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, தடியங்காய் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.40, வழுதலங்காய் ரூ.60, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30-க்கு விற்கப்பட்டது. காய்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டன்சத்திரம், மேட்டு ப்பாளையம், ஓசூர், பெங்களூர் பகுதியிலிருந்து அதிகளவு காய்கறிகள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள் ளது. தக்காளி வரத்து குறைவாக உள்ளது.
இதனால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் ரூ.3000 முதல் ரூ.3500-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், காய்கறிகள் உள்ளூர், வெளி யூர்களில் இருந்தும் குறைவான அளவில் வருவதால் விலை அதிகரித்து வருகிறது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்றார்.
இல்லத்தரசிகள் கூறுகையில், வழக்கமாக காய்கறிகள் வாங்க ரூ.200 கொண்டு வந்தால் அதிகம் வாங்கி செல்லலாம்.
தற்பொழுது காய்கறிகள் குறைவாகவே கிடைக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக தக்காளி, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து ள்ளோம். இருப்பினும் வழக்க மாக வாங்கக்கூடிய காய்கறி களுக்கு செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக செலவாகி விடுகிறது என்றனர்.






