என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
    • 40 ஏழை முதியோர் பெண்களுக்கு மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் விழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாதவ புரம் மாதவராயர் பாலர் பள்ளி மன்றத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காம ராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தப் பள்ளியில் பயிலும் 60 குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை இலவசமாக வழங்கும் விழா மற்றும் 40 ஏழை முதியோர் பெண்களுக்கு மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் மன்ற தலைவர் ரெத்தினசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிராஜா, பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வரவேற்று பேசினார். மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர் பள்ளி குழந்தைகள் பெருந் தலைவர் காமராஜர் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் லிங்கேஸ் வரி மணிராஜா, பேராசிரி யர் சுந்தரலிங்க ம், ஒற் றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் செயலாளர் அன்ப ழகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் இணைசெயலாளர் சுகேஷ் நன்றி கூறினார்.

    • கழிவு பொருட்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது
    • வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட நீர் நிலைகளான குளங்கள் மற்றும் வயல் வெளிப் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகளை அதிக அளவில் காண முடியும்.சில வருடங்களில் ஜூன் மாதம் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இங்கேயே தங்கி இருப்பதை காணமுடியும். குமரி மாவட்டத்தில்2பருவ மழை காலம் இருப்பதாலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் குளங்கள், வயல் வெளிகள் மற்றும் தண்ணீர் பகுதிகள் அதிகம் இருப்பதாலும் பறவைகள் இந்த பகுதியை தங்களின் புகலிடமாக தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.

    நீர்க்காகம், முக்குளி ப்பான், வெண் கொக்கு, பாம்பு தாரா, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா, வர்ண நாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக் கோழி, கானங்கோழி, நரமத்தாரா, வெள்ளைஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது. வெளி நாடுகளில்இருந்து ஆஸ்பி ரே, புலவர், சிவப்புஷாங்க், பச்சைஷாங்க், டெர்ன், ஊசிவால்முனைவாத்து, சாண்ட்பைப்பர், சாதா ரணடில், சிறிய டெர்ன், காஸ்பியன்டெர்ன், ஹோவெலர் பிளமிங்கோ போன்றவைக ளும்படை யெடுக்கின்றன. இதன் காரணமாக கொட்டாரம் அச்சன்குளம், சுசீந்திரம் குளம், தேரூர்பெரியகுளம், மணக்குடி காயல், தத்தையார்குளம், மாணிக்க புத்தேரி குளம் உள்பட ௧௦ குளங்களை பறவைகள் சரணாலயமாக மாற்றுவ தற்காக பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இதில் முதல்கட்டமாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளத்தில் ரூ.2 லட்சம் செலவில் தொலைவில் நிற்கும் பறவைகளை குளத்தின் கரையில் அமர்ந்து பார்க்க கண்காணிப்பு கூடம், பூங்கா, நடைபாதை, கேன்டின், குளத்தின்கரை யில்மக்கள் அமர்ந்து பறவை களைப் பார்த்து ரசிப்ப தற்கான இருக்கைகள் உள்பட பல்வேறு கட்ட மைப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து பிறகும் இவைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    இதனால் இந்தப் பறவை கள் சரணாலயம் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் இது வரை வந்ததாகத் தெரிய வில்லை. இந்த நிலையில் தற்போது பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன. குளங்களில் ஆக்கிரமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன குளங்களில் தாமரை பயிரிடப்பட்டு அவற்றின் இலைகளை சேகரிப்பது பறவைகள் நீரில் உலாவு வதை அச்சுறுத்துவது ஆகும்.

    சில இடங்களில் சுற்று வட்டார ஊர்களில் உள்ள கழிவு நீர் குளங்களில் நேரடியாக வந்து சேருவதால் நீரின் தரம் குறைவதுடன் நீரில் நச்சுத்தன்மை அதிக ரித்து பறவைகளின் அடி ப்படை உணவுப் பொரு ளான மீன்களும் இறந்து போகின்றன. குறிப்பாக அச்சன்குளத்தில் மண் நிறைந்து ஆகாயத்தாமரை, கோரைப்புல், சம்பைபுல், போன்றவை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இத னால் வாத்து இன பறவைகள் தண்ணீரில் நீந்தி மீன் பிடிக்க முடிய வில்லை. மேலும் இந்த குளத்தில் தாமரைபயிரிடப் படுவத ால்தாமரை இலைகளின் மேல் மிதக்கும் கூடுகளை கட்டும் தாமரை இலைக் கோழியின் இனம் அழிகின்றன.

    பறவை களைப் பார்வை யிட இந்த குளத்தின் வடக்கு கரையில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கூடங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இவை இரவு நேரங்களில் மது பிரியர்க ளின் திறந்தவெளி பாராக மாறியுள்ளது. மேலும் இந்த குளத்தில் கரையோரப் பகுதிகளில் சில மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கழிவு கள் மற்றும் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகி றார்கள். இது தவிர சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை இந்த குள த்தின் கரையில் கொண்டு வந்து கொட்டுகி றார்கள். இதனால் இந்த குளம் மாசுபடுகிறது.துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற காரணங்களினால் கொட்டாரம் அச்சன்கு ளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அடி யோடு குறைந்து விட்டது.

    எனவே இந்த குளத்தில் வளர்க்கப்படும் தாமரை களை அகற்றி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுத்து வெளி நாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழியல் ஆர்வலர்களும் பொதுமக்க ளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரிலீன் தொடங்கி வைத்தார்
    • பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

    முகாமை லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை மதன், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவீனா, டாக்டர் சிலி, லீபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், கனி, லட்சுமி பாய், ஜெகன், ஜெனி புரூஸ், ஜெராபின், சுமதி, டெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]

    • பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    • கனரக வாகனங்களை தடை செய்ய கோரி பொதுமக்கள் சித்திரங்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருந்து தினமும் இரவு, பகலாக கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்-சான்ட், என்-சான்ட், ஆகியவை கேரளா வுக்கு கொண்டு செல்கி றார்கள். அதிக வீல் கொண்ட பெரிய டாரஸ் லாரிகளில் கொண்டு செல்வதால் ரோடுகள் விரிசல் அடைந்து வெகு விரைவில் சேதம் அடைகிறது.

    இரவு நேரங்களில் அதிக சக்தி வாய்ந்த வெடி பொருள்கள் வைத்து பாறையை வெடிக்க வைப்ப தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் விரிசல் அடைகிறது. இரவு நேரங்களில் அதிக அளவு சத்தத்துடன் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் வாக னங்களில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினருடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பல விபத்துக்கள் நடைபெற்றன. அந்த பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கனரக வாகனங்களை தடை செய்ய கோரி ஊர் பொதுமக்கள் சித்திரங் கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜஜிபி. லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா முன்னிலை வகித்தார். வேர்கிளம்பி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெஜினி, சுந்தர்சிங், ராஜேஸ், ஊர் பொதுமக்கள் சந்தோஷ், ராமசந்திரன் டென்னிஸ், கிளைமன்ட், தேவராஜ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குமரி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் மற்றும் சிற்றாறு சிலோன் காலணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஆடு-மாடுகளை வேட்டையாடியது

    காட்டில் இருந்து குடியி ருப்புகளுக்குள் இரவு நேரத்தில் வரும் புலி ஆடு, பசுமாடு ஆகியவற்றை கடித்து கொன்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும் தவிப்புக் குள்ளானார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்கு மாவட்ட வனத்துறை சார்பாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.

    புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டது. அதன் மூலம் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வந்த நிலையிலும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    ஆனால் புலியின் தாக்குதல் மட்டும் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் நாய் புலியின் வாயில் சிக்கின. இதனால் மலைவாழ் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்க்காக மூக்க றைக்கல் பகுதியில் வனத்துறையினர் நேற்று கூண்டு அமைத்தனர். ஆனாலும் அதில் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2-வது கூண்டு அமைக்கப்பட்டது. இது பற்றி வனத்துறையினர் கூறுகை யில், இந்த 2 பகுதிகளில் தான் அதிக அளவு புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு கூண்டுகள் வைத்து உள்ளோம். இந்த கூண்டு களுக்குள் ஆடு கட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து புலி வரும் போது கூண்டில் சிக்கி விடும். அதேநேரம் ஆடு வேறு பகுதிக்கு சென்று தப்பிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் புலியை பிடித்து விடுவோம். பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் புலி வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் தான் வருகிறது. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், குழந்தை களை வெளியில் விட வேண்டாம். தேவை யின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தி உள்ளோம்.

    மேலும் ஆடு, மாடு, நாய்களை இரவு நேரங்களில் கயிற்றினால் தான் கட்டி வைக்க வேண்டும் வெளியில் விடக் கூடாது. ஆடு, மாடு களை கட்டி வைத்திருக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மர கட்டைகள் வைத்து தீ மூட்டி வைக்க வேண்டும். கூண்டு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் பகல் நேரங்களில் செல்லாமல் இருந்தால் புலி வெளியில் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனர்.

    • போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கியது
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்க ளுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப் பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து வருகி றார்கள்.

    போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வடசேரி பஸ் நிலைய பகுதியில் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினமும் அங்கு சோதனை மேற்கொண்ட போது அதே இடத்தில் அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. போலீசார் மீண்டும் ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த நிலையில் நேற்றும் அதே இடத்தில் நின்றது. போலீசார் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து 3 நாட்களாக ஒரே பகுதியில் நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த வாரம் மணிமேடை பகுதியில் கடைக்கு வந்தபோது அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததாகவும் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

    இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தங்கவேலிடம் அவரது மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையம் பகுதியில் நிற்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரி போலீசாரும் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேல் புகார் செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணிமேடை மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு வீட்டின் முன்புள்ள மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை
    • புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    வெள்ளிச்சந்தை அருகே பெரும் செல்வ விளையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்றும் அவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு வீட்டின் முன்புள்ள மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிவகுமாரின் மகன் சுபின் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார் ஆகிய பகுதிகளில் இருந்து மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆனால் இப்போது களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இது குறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    தற்போது மீண்டும் களியக்காவிளை சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, திருத்தோபுரம், குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல் போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான வாகனங்களில் செம்மண் கடத்தப்படுகிறது.

    இது குறித்து புகார் இருந்தா லும் யாரும் கண்டு கொள்வ தில்லை. ஆகவே களியக்கா விளை பகுதியில் கொடிகட்டி பறக்கும் செம்மண் கடத்தலை முடி வுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
    • கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலை யிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதேபோல ஆடி அமாவாசையான இன்று காலை கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்க ளை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த முறை ஆடி மாதம் 2 அமாவாசை நாட்கள் வருகிறது. இந்த ஆடி மாதத்தில் மாத பிறப்பான இன்றும் ஆடி மாதத்தின் கடைசி நாளான அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதியும் ஆடி அமாவாசை வருகிறது.

    இதில் 2-வதாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசையை தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடைபி டிக்கிறார்கள். இதனால் எந்த ஆடி அமாவாசையை கடைப்பிடிப்பது என்பதில் பக்தர்கள் குழப்பமான நிலையில் இருந்து வந்தனர். இதன் காரணமாக இந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று வந்த அமாவாசையை பெரும்பாலான பக்தர்கள் கடைபிடிக்கவில்லை. இதனால் ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் குறைந்த அளவு பக்தர்களே புனித நீராடினார்கள். இருப்பினும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டி ருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு குறைந்த அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா இன்று கடைபிடிக்கப்படாததால் கோவில்களிலும் குறைந்த அளவு பக்தர்கள் கூட்டமே காணப்பட்டன.

    குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி பகுதிகளில் இன்று பலரும் மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர். இந்த ஆண்டு 2 ஆடி அமாவாசை வருவதால் கேரளா பஞ்சாங்க முறைப்படி கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

    • டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம்
    • 300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    மாநில அளவிலான சர்வதேச பள்ளிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி மதுரை லட்சுமி சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் ஆரல்வாய்மொழியில் உள்ள காமரின் சர்வதேச பள்ளியில் இருந்து மாணவன் லோகேஷ் 27 கிலோ எடை பிரிவிலும் மற்றும் மாணவன் ஜேய்ஷ் 35 கிலோ எடை பிரிவிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் என்ஜினீயர் லட்சுமணன், மேலாளர் அய்யப்பன், பள்ளியின் முதல்வர் சந்திரலேகா, கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாடமி தலைவர் விஜயகுமாரி. தலைமை பயிற்சியாளர் கென்னடி மணிராஜ், பயிற்சியாளர் சங்கர்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

    • புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம்
    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரள்வார்கள்.

    கன்னியாகுமரி : 

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் நதி ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஒரே மாதத்தில் நாளையும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதியும்வருகிறது.அதன்படி ஆடி மாத பிறப்பான நாளை ஆடி அமாவாசையும் வருகிறது. நாளை அதிகாலையில் இருந்தே நெல்லை, குமரி, தூத்துக்குடிஆகிய3 மாவட்டங்கள் மட்டு மின்றி கேரளாவின் தென்பகுதி களில் இருந்தும் ஏராளமான மக்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரள்வார்கள். அவர்கள் முக்கடல் சங்கமத் தில் புனித நீராடி விட்டு வந்து கடற்கரையில் 16 கால் மண்டபம் பகுதியில் அமர்ந்திருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேத விற்பனர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வார்கள்.

    • ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்
    • 41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில், ஜூலை.16-

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கபடி அணி மாணவர்கள் ஆவரைகுளம் தென் ஆவரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்.41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்து சுழற் கோப்பையையும். ரூ.10 ஆயிரத்தையும் வென்றனர். பரிசு பெற்ற கல்லூரியின் கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரை கல்லூரியின் தலைவர் நீலமார்த்தண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்சி ஜியோ, கல்லூரியின் முதல்வர் ராஜேஷ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×