காமரின் சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம்300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
காமரின் சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
Published on

நாகர்கோவில் :

மாநில அளவிலான சர்வதேச பள்ளிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி மதுரை லட்சுமி சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் ஆரல்வாய்மொழியில் உள்ள காமரின் சர்வதேச பள்ளியில் இருந்து மாணவன் லோகேஷ் 27 கிலோ எடை பிரிவிலும் மற்றும் மாணவன் ஜேய்ஷ் 35 கிலோ எடை பிரிவிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் என்ஜினீயர் லட்சுமணன், மேலாளர் அய்யப்பன், பள்ளியின் முதல்வர் சந்திரலேகா, கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாடமி தலைவர் விஜயகுமாரி. தலைமை பயிற்சியாளர் கென்னடி மணிராஜ், பயிற்சியாளர் சங்கர்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com