என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியில் மீனவர் ஓய்வறை மற்றும் மீனவர்கள் வலை பின்னும் இடம் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    பங்குத்தந்தை சகாய ஆனந்த், குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று
    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புனித தீர்த்தங்களில் நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வருகிறது.

    இப்படிப்பட்ட சமயங்களில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும். என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

    இதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 2-வது அமாவாசையான வருகிற 16-ம் தேதி பூஜை நடக்கிறது. பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக முக்கடல் சங்கத்தில் உள்ள படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் பணியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • நாளை ஆடி செவ்வாய்
    • பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும்

    கன்னியாகுமரி :

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவிலில் பெண்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

    ஆரல்வாய்மொழி-பூதப்பாண்டி ரோட்டில் அவ்வையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி கொழுக்கட்டை அவித்து கூழ் காட்சி வழிபாடு செய்வது வழக்கம்.

    மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. நாளை ஆடி செவ்வாய் என்பதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு போதுமான கழிப்பிடம், குடிநீர் வசதிகள் இல்லை. இதனை உடனடியாக செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர்
    • 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் சமையல் பொடி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-வது மாடிகளில் கடைகள் எதுவும் இல்லாததால் காலியாக இருந்தது.

    இந்த நிலையில் கட்டிடத்தின் 2-வது மாடியில் இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து குபு...குபு...வென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கடையை உடனடியாக அடைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

    அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து காரணமாக அசம்பு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
    • 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் இன்று நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த பொதுமக்கள் மனு அளித்தனர். குமரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் முருக ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டாக வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போராட்டம்குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழில் ஆகும். தற்போது பருவ மழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்களை தூர்வாரி ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் கடைமடை வரம்புக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் அந்த பகுதிகளில் உள்ள நெற்பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

    அதே சமயம் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத பட்சத்தில் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கடை வரம்பு பகுதிக்கு உடனடியாக தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல தடிக்காரன்கோணம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் வந்து தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் தடிக்கா ரன்கோணம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சொத்துக்களோ, வீடோ இல்லை. சொந்தமாக வீடு வாங்கும் வசதியும் இல்லை. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எனவே தடிக்காரன்கோணத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனையுடன் பட்டா தந்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • ஆடி களப பூஜை நாளை தொடங்கி 30-ந்தேதி வரை என 13 நாட்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி களப பூஜை 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 12 நாட்கள் களப பூஜையும், 30-ந்தேதி உதய அஸ்தமன பூஜை என 13 நாட்கள் நடைபெறுகிறது.

    இதை யொட்டி தினமும் காலையில் கோவிலில் தாணுமாலய சுவாமிக்கும், திருவேங்கடவிண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு மகாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கும் களப அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதில் நறுமணத்துடன் கூடிய சந்தனத்துடன், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் ஆகியவை கலந்து தங்க குடத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து மாத்தூர் மடம் தந்திரி சஜித் களப பூஜை செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு களப பூஜை பிரசாதம், சிறப்பு தீபாராதனை காட்டப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர்.
    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து அவரின் வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர். பின்னர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேல்பார்வையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்பு
    • சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அப்போது கடல் நீர் திடீரென உள்வாங்குவது, கடல் சீற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

    கடல் சீற்றம்

    அமாவாசை தினமான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் "திடீர்"என்று உள்வாங்கியது. ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது. மற்றொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந்து உள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமா கமாகவும் காணப்பட்டது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்ப டவில்லை. இதனால் காலையிலேயே படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபடகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி,சின்னமுட்டம்,வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரைகிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்பட வில்லை.

    • போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.
    • டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.

    மேலும் பல லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு செல்வதாக சப்-கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கனிமவளங்கள் கொண்டு சென்ற லாரி ஒன்று வேகமாக வந்து டிரைவரின் கட்டுபாட்டை மீறி அழகியமண்டபம் சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள கடை பக்கம் வந்து நின்றது. அப்போது ஒரு சிலர் மட்டுமே பஸ்சுக்காக காத்திருந்ததால் அலறி அடித்து ஓடினர். மேலும் அருகில் சுமார் 25-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் வரிசையில் நின்றன. அதிஷ்டவசமாக இவர்கள் மீது மோதாமல் உயிர் தப்பியுள்ளனர்.

    விடிவதற்கு முன்பே செல்ல வேண்டும் என டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது
    • விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பள்ளி தாளாளரும் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபருமான அருட்பணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, இணை பங்குத்தந்தை நிக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பிரேஸ்லின் மனோ வரவேற்று பேசினார்.

    காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மேல்நிலைப்பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் உபால்டு பரிசுகளை வழங்கி பேசினார். இணை பங்குதந்தை நிக்சன் உயர்நிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார். இடைநிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சகாய மல்லிகா இடைநிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் மாணவி ஏஞ்சலின் ஸ்வீட்லி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை மாணவி ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார்கள். டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை.

    குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

    விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

    குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

    குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட் டுள்ள பெண் குடும்பத் தலைவி யாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டி ருந்தால், அந்தக் குடும்பத்தலை வரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

    குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
    • 40 ஏழை முதியோர் பெண்களுக்கு மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் விழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாதவ புரம் மாதவராயர் பாலர் பள்ளி மன்றத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காம ராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தப் பள்ளியில் பயிலும் 60 குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை இலவசமாக வழங்கும் விழா மற்றும் 40 ஏழை முதியோர் பெண்களுக்கு மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் மன்ற தலைவர் ரெத்தினசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிராஜா, பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வரவேற்று பேசினார். மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர் பள்ளி குழந்தைகள் பெருந் தலைவர் காமராஜர் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் லிங்கேஸ் வரி மணிராஜா, பேராசிரி யர் சுந்தரலிங்க ம், ஒற் றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் செயலாளர் அன்ப ழகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் இணைசெயலாளர் சுகேஷ் நன்றி கூறினார்.

    ×