search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைமடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
    X

    கடைமடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
    • 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் இன்று நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த பொதுமக்கள் மனு அளித்தனர். குமரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் முருக ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டாக வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போராட்டம்குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழில் ஆகும். தற்போது பருவ மழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்களை தூர்வாரி ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் கடைமடை வரம்புக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் அந்த பகுதிகளில் உள்ள நெற்பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

    அதே சமயம் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத பட்சத்தில் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கடை வரம்பு பகுதிக்கு உடனடியாக தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல தடிக்காரன்கோணம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் வந்து தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் தடிக்கா ரன்கோணம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சொத்துக்களோ, வீடோ இல்லை. சொந்தமாக வீடு வாங்கும் வசதியும் இல்லை. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எனவே தடிக்காரன்கோணத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனையுடன் பட்டா தந்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×