ஆரோக்கியபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரிலீன் தொடங்கி வைத்தார்பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]
ஆரோக்கியபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமை லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை மதன், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவீனா, டாக்டர் சிலி, லீபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், கனி, லட்சுமி பாய், ஜெகன், ஜெனி புரூஸ், ஜெராபின், சுமதி, டெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com