search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார சீர்கேடுகளால் அச்சன்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்தது
    X

    சுகாதார சீர்கேடுகளால் அச்சன்குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்தது

    • கழிவு பொருட்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது
    • வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட நீர் நிலைகளான குளங்கள் மற்றும் வயல் வெளிப் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகளை அதிக அளவில் காண முடியும்.சில வருடங்களில் ஜூன் மாதம் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இங்கேயே தங்கி இருப்பதை காணமுடியும். குமரி மாவட்டத்தில்2பருவ மழை காலம் இருப்பதாலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் குளங்கள், வயல் வெளிகள் மற்றும் தண்ணீர் பகுதிகள் அதிகம் இருப்பதாலும் பறவைகள் இந்த பகுதியை தங்களின் புகலிடமாக தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.

    நீர்க்காகம், முக்குளி ப்பான், வெண் கொக்கு, பாம்பு தாரா, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா, வர்ண நாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக் கோழி, கானங்கோழி, நரமத்தாரா, வெள்ளைஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது. வெளி நாடுகளில்இருந்து ஆஸ்பி ரே, புலவர், சிவப்புஷாங்க், பச்சைஷாங்க், டெர்ன், ஊசிவால்முனைவாத்து, சாண்ட்பைப்பர், சாதா ரணடில், சிறிய டெர்ன், காஸ்பியன்டெர்ன், ஹோவெலர் பிளமிங்கோ போன்றவைக ளும்படை யெடுக்கின்றன. இதன் காரணமாக கொட்டாரம் அச்சன்குளம், சுசீந்திரம் குளம், தேரூர்பெரியகுளம், மணக்குடி காயல், தத்தையார்குளம், மாணிக்க புத்தேரி குளம் உள்பட ௧௦ குளங்களை பறவைகள் சரணாலயமாக மாற்றுவ தற்காக பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இதில் முதல்கட்டமாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளத்தில் ரூ.2 லட்சம் செலவில் தொலைவில் நிற்கும் பறவைகளை குளத்தின் கரையில் அமர்ந்து பார்க்க கண்காணிப்பு கூடம், பூங்கா, நடைபாதை, கேன்டின், குளத்தின்கரை யில்மக்கள் அமர்ந்து பறவை களைப் பார்த்து ரசிப்ப தற்கான இருக்கைகள் உள்பட பல்வேறு கட்ட மைப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து பிறகும் இவைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    இதனால் இந்தப் பறவை கள் சரணாலயம் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் இது வரை வந்ததாகத் தெரிய வில்லை. இந்த நிலையில் தற்போது பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன. குளங்களில் ஆக்கிரமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன குளங்களில் தாமரை பயிரிடப்பட்டு அவற்றின் இலைகளை சேகரிப்பது பறவைகள் நீரில் உலாவு வதை அச்சுறுத்துவது ஆகும்.

    சில இடங்களில் சுற்று வட்டார ஊர்களில் உள்ள கழிவு நீர் குளங்களில் நேரடியாக வந்து சேருவதால் நீரின் தரம் குறைவதுடன் நீரில் நச்சுத்தன்மை அதிக ரித்து பறவைகளின் அடி ப்படை உணவுப் பொரு ளான மீன்களும் இறந்து போகின்றன. குறிப்பாக அச்சன்குளத்தில் மண் நிறைந்து ஆகாயத்தாமரை, கோரைப்புல், சம்பைபுல், போன்றவை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இத னால் வாத்து இன பறவைகள் தண்ணீரில் நீந்தி மீன் பிடிக்க முடிய வில்லை. மேலும் இந்த குளத்தில் தாமரைபயிரிடப் படுவத ால்தாமரை இலைகளின் மேல் மிதக்கும் கூடுகளை கட்டும் தாமரை இலைக் கோழியின் இனம் அழிகின்றன.

    பறவை களைப் பார்வை யிட இந்த குளத்தின் வடக்கு கரையில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கூடங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இவை இரவு நேரங்களில் மது பிரியர்க ளின் திறந்தவெளி பாராக மாறியுள்ளது. மேலும் இந்த குளத்தில் கரையோரப் பகுதிகளில் சில மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கழிவு கள் மற்றும் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகி றார்கள். இது தவிர சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை இந்த குள த்தின் கரையில் கொண்டு வந்து கொட்டுகி றார்கள். இதனால் இந்த குளம் மாசுபடுகிறது.துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற காரணங்களினால் கொட்டாரம் அச்சன்கு ளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அடி யோடு குறைந்து விட்டது.

    எனவே இந்த குளத்தில் வளர்க்கப்படும் தாமரை களை அகற்றி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுத்து வெளி நாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழியல் ஆர்வலர்களும் பொதுமக்க ளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×