என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிகளை மீறி செயல்படும் டாரஸ் லாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
- பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- கனரக வாகனங்களை தடை செய்ய கோரி பொதுமக்கள் சித்திரங்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருந்து தினமும் இரவு, பகலாக கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்-சான்ட், என்-சான்ட், ஆகியவை கேரளா வுக்கு கொண்டு செல்கி றார்கள். அதிக வீல் கொண்ட பெரிய டாரஸ் லாரிகளில் கொண்டு செல்வதால் ரோடுகள் விரிசல் அடைந்து வெகு விரைவில் சேதம் அடைகிறது.
இரவு நேரங்களில் அதிக சக்தி வாய்ந்த வெடி பொருள்கள் வைத்து பாறையை வெடிக்க வைப்ப தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் விரிசல் அடைகிறது. இரவு நேரங்களில் அதிக அளவு சத்தத்துடன் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் வாக னங்களில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினருடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பல விபத்துக்கள் நடைபெற்றன. அந்த பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கனரக வாகனங்களை தடை செய்ய கோரி ஊர் பொதுமக்கள் சித்திரங் கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜஜிபி. லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா முன்னிலை வகித்தார். வேர்கிளம்பி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெஜினி, சுந்தர்சிங், ராஜேஸ், ஊர் பொதுமக்கள் சந்தோஷ், ராமசந்திரன் டென்னிஸ், கிளைமன்ட், தேவராஜ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






