search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை ஆடி அமாவாசை விழா கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்
    X

    நாளை ஆடி அமாவாசை விழா கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்

    • புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம்
    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரள்வார்கள்.

    கன்னியாகுமரி :

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் நதி ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஒரே மாதத்தில் நாளையும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதியும்வருகிறது.அதன்படி ஆடி மாத பிறப்பான நாளை ஆடி அமாவாசையும் வருகிறது. நாளை அதிகாலையில் இருந்தே நெல்லை, குமரி, தூத்துக்குடிஆகிய3 மாவட்டங்கள் மட்டு மின்றி கேரளாவின் தென்பகுதி களில் இருந்தும் ஏராளமான மக்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரள்வார்கள். அவர்கள் முக்கடல் சங்கமத் தில் புனித நீராடி விட்டு வந்து கடற்கரையில் 16 கால் மண்டபம் பகுதியில் அமர்ந்திருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேத விற்பனர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வார்கள்.

    Next Story
    ×