ராஜாக்கமங்கலம் அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை

பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ராஜாக்கமங்கலம் அருகே விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
Published on

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). இவர் அருகில் உள்ள பால் சொசைட்டியில் பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று இவர் வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவரது தோட்டத்தில் விஷ மருந்தை சாப்பிட்டு உயிருக்கு போரா டிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் அவரது மகன் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com