என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் லிங்க் மூலமாக அழகிகள் படத்தை அனுப்பி வாலிபர்களை மயக்கிய கும்பல்
    X

    செல்போன் லிங்க் மூலமாக அழகிகள் படத்தை அனுப்பி வாலிபர்களை மயக்கிய கும்பல்

    • காலை, மாலையில் கார். இரு சக்கர வாகனங்களில் டிப் டாப் வாலிபர்கள் வந்து நீண்ட நேரம் கழித்து செல்வது வாடிக்கை
    • அந்த வீட்டில் 3 பெண்கள், 2 வாலிபர்கள் அரைகுறை ஆடையோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் மேலூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் 2 குழந்தைகளோடு வாட கைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

    அவரது வீட்டுக்கு தினசரி காலை, மாலை கார்களில் இரு சக்கர வாகனங்களில் டிப் டாப் வாலிபர்கள் வந்து நீண்ட நேரம் கழித்து செல்வது வாடிக்கை. இதை அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் கண்காணித்து வந்தனர்.

    இதுகுறித்து ரகசிய தகவல் தனிப்பிரிவுக்கு தகவல் வந்தது. தனிப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்து கண்காணித்து வந்தனர். நேற்று மாலையில் தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காரிலும், பைக்கிலும் வாலிபர்கள் வந்த வண்ணம் இருந்தது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்தபோது அந்த வீட்டில் 3 பெண்கள், 2 வாலிபர்கள் அரைகுறை ஆடையோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், பணகுடியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவை சேர்ந்த மஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் 2 பேர் சென்னையை சேர்ந்த அழகிய ஆவார்கள். போலீசார் பாலசுப்ரமணியன், மணிகண்டன், மஞ்சுவை கைது செய்தனர். அழகிகள் இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    விபச்சார கும்பல் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபச்சாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலசுப்பிர மணியன், மணிகண்டன், மஞ்சு ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளனர். மதுரை, கோவை பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு செல்போனில் தனி லிங் மூலமாக வாலிபர்களுக்கு அழகிகள் படங்களை அனுப்பி கொடுத்து அதற்கான தொகை விவரத்தையும் பேசியுள்ளனர். பின்னர் அந்த வாலிபர்களை வெள்ளமடம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    அவர்களை அங்கிருந்து கார் மூலமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் அழைத்து சென்று அழகி களுடன் உல்லாசம் அனுப விக்க வைத்துள்ளனர். இதற்காக ரூ.2000 முதல் ரூ.4000 வரை பெற்றுள்ள னர். மேலும் ஒரு வாரத்துக்கு ஒரு முறை அழகிகளை மாற்றி உள்ளனர். சென்னை, கேரளா மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகளையும் இங்கு வரவழைத்து விபச்சா ரத்தில் ஈடுபடுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    விபச்சார கும்பலிடமிருந்து போலீசார் சில செல்போன் எண்களையும் கைப்பற்றியுள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய நபர்களின் செல்போன் எண்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×