மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; ஆசிரியர் பலி

டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; ஆசிரியர் பலி
Published on

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எள்ளு விளையை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் (வயது 70).

இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் நேற்று மாலை ராஜாக்கமங்கலம் சந்திப்பில் டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எள்ளுவிளை சந்திப்பு அருகில் வரும் போது நாகர்கோவில் இருந்து வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் ஆறுமுகப்பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன ஆறுமுகபெருமாளுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகப்பெருமாளின் மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிலாங்காலை சேர்ந்த ஆல்வின் (33) என்பவரை தேடி வருகிறார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மேல்விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com