என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ரவுடி மீது கொலை முயற்சி வழக்கு
    • மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் மீனாட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 29). இவர் பறக்கை சந்திப்பில் உள்ள டீக்கடை யில் டீ குடித்துவிட்டு அங்குள்ள கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தினார். அப்போது கோட்டார் பகுதியை சேர்ந்த பரிமளக்கண்ணன் என்பவருக்கும், மதன்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பரி மளக்கண்ணன் அவரது நண்பர்கள் பிரவீன், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மதன்ராஜ் வீட்டிற்கு சென்று வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

    மேலும் மதன்ராஜை கம்பியால் தாக்கினார்கள். இதுகுறித்து மதன்ராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரிமளக்கண்ணன், பிரவீன், ஆகாஷ் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22). இவர் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    நான் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர்கள் பிரவீன், பரிமளக்கண்ணனுடன் பறக்கை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மதன்ராஜ் என்பவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மதன்ராஜ் என்னை அவதூறாக பேசியதுடன் கத்தியால் குத்தினார்.

    இதில் எனது கண் மற்றும் முதுகில் ரத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியி ருந்தார். இதன் பேரில் போலீசார் மதன்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
    • விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதி பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவரது தாய், தந்தையர்கள் இறந்து விட்டதால் இவர் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அந்த பகுதியில் உள்ள வர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் மீனாட்சி புரம் கட்ட பொம்மன் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 24). இவர் மெடிக்கல் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தனது மருத்துவ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் தங்குவதற்காக ஒரு அறை வேண்டும் என்று கேட்டு அந்த அறையில் தங்கி இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறை நேற்று மாலை வரை வெகு நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் அந்த லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கன்னியா குமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அவர் தங்கி இருந்த அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அந்த அறையில் தங்கி இருந்த விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்த விஜயகுமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
    • மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 40). எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெ னியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஜீவா (7) என்ற மகன் இருந்தார்.

    பெங்களூரில் வசித்து வந்த தம்பதியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் தக்கலை யில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறி யுள்ளனர். முரளிதரனும் ஐ.டி. கம்பெனி பணியை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணி யாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதையடுத்து சைலஜாவின் தந்தை கோபால் மகளை கூப்பிட்டு பார்த்தார். ஆனா லும் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கத வின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறி யில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் காணப்பட்டனர். பேரன் ஜீவா முகத்தில் பாலித்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    தகவல் அறிந்து துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட முரளிதரன் எம்.இ., பி.எல். முடித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    திருமணத்துக்கு பிறகு மனைவி சைலஜா உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு மகன் பிறந்தான். அவனுக்கு ஜீவா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்துள்ளனர்.

    முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவி யின் சொந்த ஊரான தக்க லைக்கு குடி பெயர்ந்துள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன்-சைலஜா தம்பதியருக்கு மகன் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்தது மன வேதனையை ஏற்படுத்தியது. பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்து வர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்க மடைய செய்து அவரது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா அறையில் தனது மகன் கட்டிலில் கிடந்த அந்த அறையிலேயே மின் விசிறியி லும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்

    • மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வா ணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் அந்த மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (24-ந்தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில், தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலை மையிலும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் லதா கலைவாணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ, மாநகர மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் முன்னலையிலும் நடைபெற உள்ளது.

    ஆகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணிகளின் மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் (மகளிர்), வட்ட, கிளை மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வா கிகள், மகளிர் தொண்டர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் கலந்து கொள்ள வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
    • தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்றது. தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்ட னர். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மாவட்டமாகும். ஏனென்று சொன்னால் தி.மு.க.வின் வரலாறை குறிப்பாக கலைஞருடைய வரலாறை முழுமையாக தெரிந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்த பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசை அவதூறாக பேசியுள்ளார். பல பொய்யான தகவல்களையும் கட்ட விழ்த்துள்ளார்.

    தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார். காமராஜருக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவும், முன்புள்ள வரலாறும் தெரிய மால் அண்ணாமலை உளறி விட்டு சென்றுள்ளார்.

    காமராஜரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது தி.மு.க. தான். 1961-ல் முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது தி.மு.க. என்பதை அண்ணாமலை மறந்து விடக்கூடாது. ராமர் கோவில் வைத்து வடக்கே அரசியல் செய்வது போல், இங்கு காமராஜரை வைத்து அரசியல் செய்ய பாரதிய ஜனதா நினைக்கிறது. காமராஜருக்கு பதவி ஆசை இருப்பது போன்று நாகர்கோவிலில் அண்ணாமலை சித்தரித்து பேசி உள்ளார்.

    காமராஜரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தனது முதல்-அமைச்சர் பதவியை தூக்கி எறிய முன்வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் தமிழ் மண்ணுக் காக போராடிய காமராஜர் பெயரை சென்னை விமான நிலையத்திற்கு வைத்துக்காட்டியது தி.மு.க.வாகும்.

    நாகர்கோவிலை நகராட்சி யில் இருந்து மாநகராட்சியாக மாற்ற பலரும் ஆசைப்பட்டார் கள். ஆனால் அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி காட்டினார்.

    மக்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சி நாட்டில் ஆட்சி அமைப்பது நிச்சயம். அப்படி பார்க்கும்போது மணிப்பூரில் நடத்த கொடூரங்களை பார்த்தால் பாரதிய ஜனதா அரசு ஒரு கையாலாகத அரசு என தெரிகிறது. இதன்மூலம் சிறுபான்மையினர் மக்க ளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவா கியுள்ளது.

    செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?. ஓட்டுக்கு காசு கொடுப்பவர் களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வேட்பாளர்களையே பணம் கொடுத்து வாங்கும் கட்சி பா.ஜ.க. தான். தமிழகத்தில் 40-க்கு 40 என நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நிர்வாகிகள் நசரேத் பசலியான், தில்லை செல்வம், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ். பார்த்த சாரதி, அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன், பிரபா ராம கிருஷ்ணன், இ.என். சங்கர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், மதியழகன், சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன் மற்றும் வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மண்டல தலைவர் ஜவகர் நன்றி கூறினார்.

    • பேரன் ஜீவா முகத்தில் பாலி்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்து உள்ளான்.
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், மகனை கொன்று விட்டு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி தரன் (வயது 40). எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களது மகன் ஜீவா (7)

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி இவர்கள் குடியேறினர். முரளிதரனும் ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்பட வில்லை. இதையடுத்து அங்கு வந்த சைலஜாவின் தந்தை கோபால், மகளை கூப்பிட்டு பார்த்தார். ஆனாலும் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் காணப்பட்டனர்.

    பேரன் ஜீவா முகத்தில் பாலி்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்து உள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், மகனை கொன்று விட்டு தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட முரளிதரன் எம்.இ., பி.எல். முடித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு மனைவி சைலஜாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு மகன் பிறந்தான். அவனுக்கு ஜீவா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து உள்ளனர்.

    முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடி பெயர்ந்து உள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன்-சைலஜா தம்பதியருக்கு மகன் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்தது மன வேதனையை ஏற்படுத்தியது. பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் தான் மனமுடைந்த அவர்கள் முதலில் மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்துவர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர் அவனது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா மகன் கட்டிலில் கிடந்த அந்த அறையிலும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர். வீட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

    அதில் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் தவமாய் பெற்ற மகனின் நோயை குணப்படுத்த முடியாததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை
    • இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    தி.மு.க.வின் குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 1.1.2024-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத் தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள் ளது. கன்னியா குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேற்று முதல் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 1.1.2024-ல் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்க ளையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டும்.

    வாக்காளர் சேர்க்கும் பணியின் போது தி.மு.க. வின் சார்பாக தொகுதி வாரியாக நியமிக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-BLA2 க்கள் தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவ லர்கள்- BLO க்களுடன் இணைந்து மேற்கண்ட வாக் காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணி மற்றும் சிறப்பு முகாம்களில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது
    • குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியில் கோயிக்கல் தோப்பு புனித தோமையார் ஆலயம் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் ஆலயத்தின் முன் உள்ள மாதா குருசடியில் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது மாதா சொரூபத்தில் தங்க நகைகளை அணிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது.இதனை கண்டு சந்தேக மடைந்த பெண்கள் ஆலய பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து பார்த்தபோது குருசடியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு சொரூபத்தில் அணி விக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு சவரன் தங்க சங்கிலி மற்றும் மூன்று மோதிரங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    அதே நேரத்தில் மாதாவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த தங்க பொட்டு மற்றும் தாலி சுட்டிகளை திருடர்கள் எடுத்து செல்லாமலும், குருசடியின் கீழ் உள்ள காணிக்கை பெட்டியை எடுக்காமலும் சென்றிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பங்கு தந்தை நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் வந்து குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அங்குள்ள காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    யாரோ மர்மநபர்கள் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • திருவிழா கொடியேற்றத்துடன் தொட ங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினார். புனித அல்போன்சா சிறப்பு நவநாள் தக்கலை மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜோஷி குளத்திங்கல் ஜெபித்தார். புன்னையடி புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை சதீஷ்குமார் ஜாய், மேலபெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குதந்தை குரூஸ்கார்மல், தக்கலை மறை மாவட்ட பொருளாளர் ஜோண்சிலாஸ், தக்கலை புலரி அச்சக மேலாளர் வினு ஜோசப் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோ ட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்தி ருப்பலி நிறைவேற்றுகிறார். 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு படந்தாலுமூடு திருஇருதய மறைவட்ட ஆலய பங்குதந்தை தோமஸ்நேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியான குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கி றது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30-க்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை புனித அல்போன்சா திருத்தல பங்குதந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ராஜையன், ஜோபெலிக்ஸ் மலையில் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் ரெகுவரன் நாயர், ஓய்வு பெற்றவர் ராணுவ வீரர். இவரது மகன் திருமணம் முடிந்து கொடைக்கானலில் வசித்து வருகிறார்.

    இதனால் ரெகுவரன் நாயரும் அவருடைய மனைவியும் வன்னியூரில் குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15-ந் தேதி மகனை பார்ப்பதற்காக கொடைக் கானல் சென்றனர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அவர்கள் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.22 ஆயிரம் மற்றும் 1½ பவன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த யாரோ மர்ம நபர்கள் திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ரெகுவரன் நாயர், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து நகை பணம் திருடிய சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெற்றி கோப்பை பயணம்
    • கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது

    கன்னியாகுமரி :

    ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி வெற்றி கோப்பையை கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வெற்றி கோப்பையை சென்னையில் கடந்த 20-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    விழாவின் தொடக்கமாக ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ரெமோ மனோ தங்கராஜ் முன்னிலையில் மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக செயலாளர் டிக்சன் தலைமையில் விளையாட்டு வீரர்கள் விழா மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அந்த வெற்றி கோப்பையை அவர்கள் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினார்கள். குமரி மாவட்ட ஆக்கி விளையாட்டு கழக தலைவர் டாக்டர் டங்ஸ்டன் சென்னையில் நடைபெறும் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி பற்றி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் வெற்றி கோப்பை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து ஆசிய ஆக்கி போட்டிக்கான குறியீட்டு சின்னம் வெளியிடப்பட்டது. பின்னர் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட பலர் ஆக்கி மட்டையை கையில் தாங்கி பந்தை அடித்து விளையாடிய காட்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், உதவி கலெக்டர் குணால் யாதவ், கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அதன் பிறகு இந்த ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் வெற்றி கோப்பையை ஆக்கி விளையாட்டு வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இதற்காக தனியாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் பயணமாக எடுத்துச்சென்றனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வெற்றிக்கோப்பை பயணம் நெல்லை, விருதுநகர், மதுரை உள்பட 34 மாவட்டங்கள் வழியாக வருகிற 30-ந்தேதி சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

    • படகுகளை பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மீன்களின் இனப்பெருக்கு பருவகாலத்தில் விசைப் படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட் டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்க மங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல் லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தி யாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளி ரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப் படகுகள் கரை திரும்பி மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக் காலத்தில் விசைப் படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்கலம் நீங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் விசைப்படகுகளை தீவிரமாக பழுது பார்த்து வருகின்றனர்.

    ×