search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும்
    X

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை
    • இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    தி.மு.க.வின் குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 1.1.2024-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத் தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள் ளது. கன்னியா குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேற்று முதல் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 1.1.2024-ல் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்க ளையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டும்.

    வாக்காளர் சேர்க்கும் பணியின் போது தி.மு.க. வின் சார்பாக தொகுதி வாரியாக நியமிக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-BLA2 க்கள் தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவ லர்கள்- BLO க்களுடன் இணைந்து மேற்கண்ட வாக் காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணி மற்றும் சிறப்பு முகாம்களில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×