என் மலர்
கன்னியாகுமரி
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
- நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.
பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது
- போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் 3 டெம்போவில் குப்பை கழிவுகள் ஏற்றி கொண்டு வந்து வெள்ளிகோடு பகுதியில் கொட்ட முயற்சித்தனர். அபபகுதி மக்கள் ஒன்றிணைந்து டெம்போவை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 டெம்போவை பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
- போலீசார் விசாரணையில் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே தாறா விளை திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வகுமார்.
இவர் கேரளாவில் மரக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தெர்ஷா மோள் (வயது 16 )தெர்ஷா மோள் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி கூடம் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வருவார். இதனால் பல முறை தாயார் பிரேமா கண்டித்துள்ளார்.
இது போல நேற்றும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்து தாயார் கண்டித்தார். உடனே ஆவேசமாக தெர்ஷா மோள் வீட்டின் மேல்மாடிக்கு சென்று கதவை பூட்டியுள்ளார்.வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு பார்த்த போது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் தெர்ஷா மோள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர் தெர்ஷா மோள்பரி சோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக தந்தை மரிய செல்வகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் தினமும் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார். என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
நாகர்கோவில் :
குறுமத்தூரில் ஒய்-73 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட குறுமத்தூர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவு பெற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவருமான சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, ஜோஸ்வா, சுரேஷ்குமார், வசந்தா, விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பென்னட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சலீம், செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
- பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நாளை (24-ந்தேதி) முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடக்கிறது.
முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவ விநியோகத்தை குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்ட முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் சுமார் 3 லட்சத்து 4 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றுக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதிக்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
500 ரேஷன் கார்டுகளுக்கு குறைவாக உள்ள முகாம்களில் 4 பேரும் அதற்கு மேல் ரேஷன் கார்டு உள்ள முகாம்களில் 5 முதல் 10 ஊழியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கலைஞர் உரிமைத்திட்ட முகாமிற்கு செல்லும்போது விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- கன்னியாகுமரியில் அதிகாரிகள் அதிரடி சோதனை
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகுதி யில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், பிரவீன்ரகு, ரவி ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மொத்தம் 44 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட் டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 7 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை. இதுபோன்ற ஆய்வுகள் அவ்வப்போது "திடீர்"என்று மேற்கொள் ளப்படும் என்றும் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட புகார் ஏதேனும் பொது மக்கள் தெரிவிக்க விரும்பி னால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், அவர்களு டைய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரெஸ்லின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்
- சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ரெஸ்லின் (வயது 24). இவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஜார்ஜ் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவரது மனைவி பள்ளிக்கு சென்று பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரெஸ்லின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரெஸ்லினை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரெஸ்லின் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து தாயார் பவுஸ்டி கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
- சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
- ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தானியங்கி, நுண்ணறிவு கணினி மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
டாக்டர் ஸ்ரீ தேவி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். மாநாட்டின் கருப்பொருள் மற்றும் நோக்கத்தை பேராசிரியர் மோகனலட்சுமி வெளி யிட்டார்.
பேராசிரியர் ரெஜி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் பி.சுபோதா அமர்வு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம் பேராசிரியர் எச்.வென்னிலா, பேராசிரி யர்கள் முத்துமணிகண்டன், யு.டி.எஸ்.பிள்ளை ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஆட்டோ மேஷன் தொழில்நுட்பத்தின் ஆட்டோமேஷன் மற்றும் தேவை குறித்து எடுத்துரைத்தார். டாக்டர். யு.டி.எஸ்.பிள்ளை இந்தியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் அதன் ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வை அளித்து மாணவர்களை ஆராய்ச்சியை தொடர அறிவுரைகளை வழங்கினர். பெனிஷா நன்றி கூறினார்.
மேலும் கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- தனது தாயிடம் சொத்துகளை தனது பெயரில் எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார்
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே உள்ள உதச்சிகோட்டை பகுதி மேத்தன்விளையை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சுஜாதா (வயது 44). இவர்கள் மகன் மோனிஷ் (21). மோகன்தாஸ் இறந்து விட்டதால் சுஜாதா தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மோனிஷ் தனது தாயிடம் சொத்துகளை தனது பெயரில் எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார். இதற்கு சுஜாதா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோனிஷ் சம்பவத்தன்று கையில் வெட்டு கத்தியுடன் சென்று தாயை அடித்து காலால் உதைத்துள்ளார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதில் காயமடைந்த சுஜாதா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது
- தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கு வரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லக்கூடாது. 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. மேலும் கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல வேண்டும்.
அதாவது ஆரல்வாய்மொ ழியில் இருந்து செண்பகரா மன்புதூர், துவரங்காடு வழியாக களியங்காடு வந்து வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் காவல்கி ணறில் இருந்து தோவாளை, வெள்ளமடம், அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்ச குளம் வழியாக களியங்காடு வந்து செல்லலாம். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் இல்லை. குறுகிய சாலைகள் தான் உள்ளன.
இதன் காரணமாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்து வருகிறோம்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடர்பாக மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். ஏற்கனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
கோட்டார் போலீஸ் நிலையம் முன் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் கூறுகையில், தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொள்மு தலை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தியை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட் டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக நல்ல நிலையில் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மின்சார செலவை குறைக்க வும் நடவடிக்கை மேற்கொண் டுள்ளோம். ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பாலுக்கு உடனடிகாக பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்கு ஒருமுறை பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
பேட்டியின்போது கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகி யோர் உடன் இருந்தனர்.
- வனத்துறையினர் எலைட் படையினர் சல்லடை போட்டு தேடும் பணி தீவிரம்
- மேலும் ஒரு பசுவை புலி தாக்கியது
நாகர்கோவில் :
பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைக்கல் பகுதியில் குடியிருப்புகளில் புலிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. அந்த பகுதியில் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலியை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தினமும் ஆடு, மாடுகளை கடித்து குதறி வந்தது.
இதையடுத்து புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் குமரி மாவட்டம் வந்தனர்.
அவர்கள் குமரி மாவட்ட அதிகாரி இளையராஜா உடன் இணைந்து புலியை பிடிக்க புதுவியூகம் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிற்றாறு சிலோன் காலனி மூக்கறைக்கல் பகுதியில் வனத்துறையினர் ஆட்டு கொட்டகை போன்று கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயன்றனர்.
ஆனால் புலி சிக்கவில்லை. வனத்துறையினரும், எலைட் படையினரும் பழங்குடி மக்களுடன் இணைந்து 2 குழுக்களாக பிரிந்து சென்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று புரத்தி மலைப் பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி கடித்து உள்ளது. இதில் பசுவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். புலி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிற்றாறு பகுதியில் ஒரு குழுவினரும், சிற்றாறிலிருந்து பத்துகாணி வரை மேலும் ஒரு குழுவினரும் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டுப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிற்றாறு முதல் பத்து காணி வரையில் உள்ள பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் எலைட் படையினரும் காட்டுப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிற்றாறு சிலோன் காலனி மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சிற்றாறில் இருந்து பத்துகாணி வரை தேடும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம்
- மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 74 வயது நோயாளி ஒருவர் ப்ராஸ்டேட் புற்றுநோயுடன் கடுமையான முதுகுவலி மற்றும் வயிறு வலியோடு அனுமதிக்கப்பட்டார்.
அவரை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜேஷ் பரிசோதனை செய்தார். அதில் புற்றுநோய் தண்டு வடத்தில் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடுமையான முதுகுவலி மற்றும் இடுப்பு வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது.
நோயாளிக்கு சி.டி. ஸ்கேன் உதவியுடன் (சுப்பீரியர் ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக்) எளிதாக செய்யப்பட் டது. ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸ் என்ற சிகிச்சை செய்வதன் மூலம் நாள் பட்ட இடுப்பு வலியினை குறைக்கலாம். இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முறையாக சி.டி.ஸ்கேன் வழிகாட்டுதலின் உதவியுடன் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.






