என் மலர்
கன்னியாகுமரி
- பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி
- விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை. பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை பெற்றது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட் வின் வின்சென்ட் மறையுரை யாற்றினார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரி வின் சென்ட் மற்றும் பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கடற்கரை களை கட்டியது
- திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கன்னியாகுமரி, ஆக.6-
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்ற னர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசா ரும், கடலோர பாது காப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- மின்விளக்கு அலங்காரம் செய்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் குருசடி உள்ளது. இங்கு திருவிழாவை யொட்டி கோபுரத்தின் உச்சியில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்தது.
இந்த பணியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 45) என்பவர் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபிரகாம் உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நான் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்கவும் கேட்டு முதல்-அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன்.
அதனடிப்படையில் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்யவும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே சாலை பணிகள் அனைத்துக்கும் சில வாரங்களில் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- “சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது
- நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் "சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கு எஸ்.எம்.ஐ.டி.எஸ். ரோகினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் பேன்சா இந்தியா, ஆகியவற்றுடன் இணைந்து விஸ்வ யுவக் கேந்திரா ஆகியவை சார்பில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை பொறியியல் துறையின் எச்.ஓ.டி. கிருஷ்ணவேணி வரவேற்று பேசி னார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்து தலைமையுரையாற்றினார். விஸ்வ யுவக் கேந்திரா திட்ட அலுவலர் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினார். வைகை அறக்கட்டளை இயக்குனர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.
ரோகிணி பொறியியல் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் மற்றும் எஸ்.எம்.ஐ.டி. ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மூத்த சுகாதார ஆலோசகர் பாபு தண்ணீர் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கை விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார்
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே கல்லாம்பொற்றைவிளை, செறுகோல் பகுதியை சேர்ந்தவர் கணேசன், தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியில் முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுஜின் (வயது 20) தனியார் கல்லூரியில் டி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் காலையில் பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனது செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார். படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் கணேசன் கண்டித்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே சுஜின் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
- தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே வெண்டலிகோடு பம்பச்சை தாழவிளை பகுதியில் கால்வாய் ஒன்று பாய்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
இது அந்த பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரின் பூனை என்று தெரியவந்தது. உடனே அந்த பகுதி மக்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு அலுவலர் செல்வமுருகன் தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்க்கும்போது பாம்பு பூனையை கடித்து கொண்டு இருந்தது. அவர்கள் பாம்பின் பிடியில் இருந்து பூனையை விடுவித்தனர். பூனை இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைபாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
- வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே செங்கோடி நெடுமானூர் விளை பகுதியை சேர்ந்தவர் ஐசக் ராஜ்குமார். தனியார் ஆம்னி பஸ்சில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ஏசுஅடிமை என்பவரின் மகள் ஜினிமலர் (வயது 37) என்பவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஜினிமலர் அந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவில் பலர் கடன் பெறுவதற்காக ஜாமீன் கையெழுத்து போட் டுள்ளார். இதை அறிந்த ஐசக் ராஜ்குமார் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று ஐசக் ராஜ்குமார் வீட்டிற்கு வெளியே நின்ற போது, சமையலறையில் இருந்த ஜினிமலர், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஐசக்ராஜ்குமார் ஓடி வந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார். படுகாயத்துடன் உயிருக் குப்போராடிய ஜினிமலரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ஜினிமலர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஐசக்ராஜ்குமார், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டு கழகம் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து புணரமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக ரூ.4.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா திற்பரப்பு அருவி அருகில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட பல சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டமாகும். திருவட்டார் தாலுகா இயற்கை வளத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுலாவிற்கும் பெயர் பெற்றது. தெற்கு ஆசியாவின் மிக உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி மாவட்டத்தில் தான் அமைந் துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க உதயகிரி கோட்டையும் மிக அருகிலேயே அமைந்துள்ளது. அதனால் தான் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும் இணைந்து மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்ப டுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2021-2022 மாநில அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் சிற்றாறு-2 அணை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங் கப்படவுள்ளது.
மேலும் திருவள்ளுவர் சிலை ரூ.11.98 கோடியில் திருவள்ளுவர் சிலையில் லேசர் லைட் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட உள்ளது. முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் அடிக் கல் நாட்டப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறது.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறைக்கும் அதிக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும்,விவேகானந்தர் சிலைக்கும் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், சுற்றுலாஅலுவலர் சதீஷ்குமார், சுற்றுலா வளர்ச்சி கழக செயற் பொறியாளர் சீனிவாசன், திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, அரசு வழக்கறிஞர் ஜாண்சன், திற்பரப்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ஜான்எபனேசர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
- திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வழக்கமான அளவை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை குறைந்ததையடுத்து நீர் நிலைகளிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 27.57 அடியாக இருந்தது. அணைக்கு 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 681 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரை விட கூடுதல் அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் இன்று காலை 24.65 அடியாக இருந்தது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 11.1 அடியாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் தண்ணீர் வற்ற தொடங்கி யுள்ளது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டுமே தண்ணீர் முழு கொள்ள ளவில் உள்ளது.
75 சதவீ தத்திற்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. அணைகளிலும், குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- தர்மராஜ் வெட்டுமணியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48) தொழிலாளி. இவரை பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஆபாசமாக பேசியுள்ளார். இந்நிலையில் தர்மராஜ் வெட்டுமணியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது பெண்ணின் உறவினர் ராஜன் என்பவரி டம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து தர்மராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் தர்மராஜை உடைந்த பாட்டிலால் கையில் குத்தி கிழித்துள்ளனர். இதனால் தர்மராஜ் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததும், 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தர்மராஜை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- ட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கன்னியாகுமரி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதையடுத்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர தலைவர் ஜாண் வெர்ஜின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னோஷிஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், தங்க நாடார், வட்டார செயலாளர்கள் வக்கீல் ராஜேஸ், ராஜாதாஸ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொன்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேரூராட்சி விவசாய பிரிவு தலைவர் வினு, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஜாண் போஸ்கோ, ஓ.பி.சி. பிரிவு தலைவர் அபினேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனிஷ் ராஜ், வார்டு தலைவர் சுஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்நகர் காமராஜர் பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் திங்கள் நகர் பேரூர் துணை தலைவர் ரீத்தம்மாள், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜூமோன், தக்கலை ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, ஜேக்கப் அருள்பால், தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப் புக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பி னர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்.துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






