

கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48) தொழிலாளி. இவரை பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஆபாசமாக பேசியுள்ளார். இந்நிலையில் தர்மராஜ் வெட்டுமணியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது பெண்ணின் உறவினர் ராஜன் என்பவரி டம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து தர்மராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் தர்மராஜை உடைந்த பாட்டிலால் கையில் குத்தி கிழித்துள்ளனர். இதனால் தர்மராஜ் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததும், 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தர்மராஜை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.