என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு
    • சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில், ஆக.14-

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை (15-ந்தேதி) நடை பெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுற் கொள்கிறார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஆர். டி.ஓ சேதுராமலிங்கம் பார்வையிட்டார்.

    சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபபட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் போலீ சாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையினர் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது கடற்கரை கிராமங்களில் சுற்றி திரிகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதியில் உள்ள களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலை யங்களில் உள்ள பார்சல்கள் முழுமையாக சோதனைக்கு பிறகு வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ரெயில்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில்வே தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை

    கன்னியாகுமரி :

    76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்கி ழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரி கடல் நடு வில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர கன்னியாகுமரி கட லோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம் மற்றும் கடற்கரை பகுதியில் போலீசார் தீவி ரமாக கண்காணித்து வரு கிறார்கள். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • 5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு டேனியல் ஸ்போர்ட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த 3 நாட்க ளாக நடைபெற்றது.

    இந்த போட்டியில் கத்தார், துபாய், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றனர். மேலும் 3 பிரிவுகளில் இந்த போட்டி நடை பெற்றது.

    5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரி சளிப்பு விழா நடை பெற்றது.

    இதில் சிறப்பு விருந்தி னராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பரிசு கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சி.எல்.ஜோ, பொன்ஜெஸ்லி கல்லூரி முதல்வர் பொன்.ராபர்ட் சிங் மற்றும் சங்க தலைவர் சுந்தர், செயலாளர் சண்முகம், பொருளாளர் பிரேம் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்ப

    கன்னியாகுமரி :

    மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு சம்பந்தமாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாங்கையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி செயலாளர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சலாம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறும் கழக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வாரியாக அதி கமான வாகனங்களில் சுமார் 5000-க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வது. 1989-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி தாக்கிய சம்பவம் குறித்து இப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், மணி, ஜெயசுதர்சன், குழித்துறை நகர செயலாளர் அழகராஜ், அணி செயலாளர்கள் வழக்கறிஞர் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித்குமார், யூஜின், மனோ, காசிராஜன், ஜாண், மகாஜி செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டார் நன்றி கூறினார்.

    • ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.
    • நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை.

    நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அதை பெறுவதற்கு நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். உயிர் கொடுத்து ரத்தம் சிந்தி நாட்டின் விடுதலை மட்டுமே லட்சியமாக கொண்டு போராடிய அவர்கள் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணம். ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் உயிரை துறந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்.

    நமது முன்னோர்கள் நமக்காகவும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் பெற்று தந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. நமது சுதந்திரத்தை படிப்படியாக பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு
    • 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் தக்கலை பகுதிகளில், ஆணையாளர் லெனின் உத்தரவின் பேரில், சிக்கன் மற்றும் மட்டன் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்கின்ற ஆய்வு நகராட்சி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் ஆகியோர்கள் தர்கா ரோடு பகுதிகளில் உள்ள சிக்கன் மற்றும் மட்டன் உள்ளிட்ட 13 கடைகளில் ஆய்வு செய்வதில், சுமார் 6 கிலோ அளவுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன், சிவக்குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

    • பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு
    • குமரியில் 3 நாள் நடைபயணம்

    நாகர்கோவில், ஆக.13-

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் நடை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (14-ந்தேதி) இரவு கன்னியாகுமரி வருகிறார்.

    பின்னர் குமரி மாவட்டத் திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபய ணம் மேற்கொள்கிறார்.

    15-ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்று மதியம் குழித்துறை யில் சிறப்புரை ஆற்றுகிறார். அங்கு அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக் குட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை வில்லுக்குறி யில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    18-ந்தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கன்னி யாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கி கொட்டாரத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    அண்ணாமலை சிறப்பு ரையாற்ற உள்ள 6 இடங்க ளையும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலை மையில் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகர்கோவில் வேப்பமூட்டில் அண்ணா மலை பேச உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு அதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டனர். மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
    • பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடையில் பெரும்புழி ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வருடாந்திர மண்டல அபிஷேகம் மற்றும் கொடை விழா நடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென ஆலயத்தில் புகுந்து திருவிழா நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் ஆலய நிர்வாகி களுக்கு மிரட்டல் விடுத்த தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்து முன்னணி மாநில நிர்வாகி மிசா சோமன் தலைமையில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சசிகுமார், உண்ணாமலை கடை துணை தலைவர் விஜய குமார் உட்பட ஏராளமான இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரப ரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மார்த்தாண் டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க அதிரடி படையினரும் குவிக்கப்பட்டனர். ஆனால் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இந்து அமைப்பினர் காவல்துறையினருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து போலீசார், தகராறில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அந்த கும்பல் கலைந்து சென்றது. அதன் பின்னர் அங்கு திருவிழா அமைதியான முறையில் நடந்தது.

    தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
    • ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகரும், சிறந்த ஊக்க மூட்டும் பேச்சாளருமான டாக்டர்.தாமு கலந்து கொண்டு "நான் ஒரு சாம்பியன்" என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கருத்துரை வழங்கினார்.

    மாணவர்கள் கல்வியில் உயர் நிலைமையை அடை வதற்கான வழிமுறைகளை அவருடைய வாழ்க்கை மற்றும் திறமைகளின் மூல மாக தாமு பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் தங்க ளின் பெற்றோர்க ளுக்கும், பேராசிரி யர்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஆசிரி யர்களுக்கு நன்றி பாராட்ட வைத்தார்.

    முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மது சுரேஷ் மாண வர்களுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை பற்றி தொழில்நுட்ப கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

    அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் கல்லூரி அளவில் 1 முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற பொறியியல் கல்லூரி மாணவர்களும் பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர். பின்னர் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் டாக்டர் மது சுரேஷ், ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் வரத ராஜன், வேதியியல் துறை தலைவர் டாக்டர் ராதிகா, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜெஸி பயஸ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • கடற்கரை களை கட்டியது
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான இன்று கூட்டம் கூடியது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்க ளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இன்று கன்னியா குமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதி கரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியில் கன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த உண்டி யல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கோவிலை உடைப் பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பப்பது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சந்தேகப்படும்படியாக நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் கோவிலில் உண்டியல் திருடியதை ஒப்புக்கொண் டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மயிலாடி அமராவதிவிளை பகுதியை சேர்ந்த மரிய சேவியர் (வயது 32) என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மரிய சேவியர் மீது ஏற்கனவே அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் உண்டியல் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 16-ந்தேதி நடக்கிறது
    • கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடக்கி றது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரி சனத்துக்கு அனுமதிக்கப்படு கிறார்கள்.

    ஆடி அமாவாசையை யொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகும ரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.

    அதன்பிறகு கடலில் புனித நீராடி விட்டு ஈரத்து ணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கி றார்கள். ஆடி அமாவா சையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப் பட்டு உள்ளன.

    இரவில் அம்மன் வீதி உலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகி றார்கள். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்க ளில் இருந்து கன்னியா குமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    கோவில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×