என் மலர்
கன்னியாகுமரி
- எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள்.
- புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டிக்கொண்டு இருக்கின்றோம். 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள். புள்ளி விவரங்களை தி.மு.க. வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு தி.மு.க. முழுக்க முழுக்க எதிரியாக உள்ளது.
ஆளும் கட்சியாக தி.மு.க. வந்த பிறகும், முதலமைச்சர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க., எதிர்க்கட்சி போல் நடப்பது சரியா?. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும். பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பதும் தவறு.
வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். இன்னும் முதலமைச்சர் வன்மத்தை தூண்டுகிறார்.
அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மிக சிறப்பாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். சமூகத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். ரெட் ஜெயின் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். படம் சமூக அக்கரையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும். இதனை முதலமைச்சர் பாராட்டுகிறார்.
நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் அவர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவியை ‘ராகிங்’ செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரியில் ‘ராகிங்’ கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் படித்து வந்த கல்லூரியில் நேற்று சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையடுத்து வினாடி-வினா போட்டி நடந்தது. அப்போது அந்த மாணவி அவருடன் படிக்கும் சக நண்பருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அவரது நண்பர் பேசாமல் சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த மாணவியின் தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மாணவி மனவருத்தம் அடைந்தார். உடனே அந்த மாணவி அங்கிருந்து சென்றார்.
கல்லூரியில் உள்ள கட்டிடத்தின் மாடி தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த சக மாணவிகள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக மாணவியின் தாயார் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணை யில் 'ராகிங்' கொடுமை காரணமாக மாணவி மாடியிலிருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியை 'ராகிங்' செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரியில் 'ராகிங்' கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
- முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கடுக்கரை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம் சிகிச்சை, கண் மருத்துவம், புகையிலை சம்பந்தமான சிகிச்சைகள், தொழுநோய், காசநோய், சித்த மருத்துவம், ஹோமியோபதி சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள் .
டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் பூதலிங்கம் காங்கிரஸ் நிர்வாகிகள் சீலன், ஹென்றி, ராபி உட்பட பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- 31ந் தேதிக்குள் பதிவு செய்ய கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
- ஆசிரியர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக நடைபெற வேண்டும்
நாகர்கோவில், ஆக.14-
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளுக்கு மான பாடதிட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் பொதுவாக உள்ளதால் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு வைத்து நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாண வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் 31-ந் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும.
முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சி யாக நடைபெற உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தினமும் சாலை பணி உள்ளி ட்ட மேம்பாட்டு பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார்.
இன்று 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர் தெருக்களில் ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
6-வது வார்டுக்குட்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ. தெருவில் ரூ.2.80 லட்சம் செலவில் பேவர் பிளாக் மறுசீரமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டுக்குட்பட்ட சி.டி.எம்.புரம் குறுக்கு தெருக்களில் ரூ.1.67 கோடி மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரம ணியம், உதவி பொறியாளர் ராஜா, தொழில்நுட்ப அலுவலர் தேவி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்யராஜ், ராஜா, கவுன்சிலர் ஜெயவிக்ர மன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.குமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்து வருகிறது.
அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையம் சார்பில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களு க்கான பயிற்சி இன்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பிரபாகர் தலை மை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் துரைராஜ், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநி திகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகள் என்ன? பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளி வளர்ச்சி மற்றும் செயல்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் அரசின் கட்டுப்பா ட்டில் உள்ளது. அதனால் சில வளர்ச்சி பணிகள் மாநக ராட்சியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இணைக்கும் வகையில் அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என கணக்கிட்டு மாநகராட்சி நிதியில் பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசி ரியர் பயிற்றுநர்கள் ஜெசிகா மேரி, முருகேசன், ரெஜி, ரவிக்குமார், ஜான்சன், பால்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம், சந்தையடி, சாமிதோப்பு, குலசேகரபுரம் வழியாக சுற்றுப்பாதையில் நாகர்கோவிலுக்கு தடம் எண் 1-டி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் 12 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பஸ்சை ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்த டிரைவர் அழகேசன் (வயது 42) ஓட்டிச்சென்றார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அரசு பழத்தோட்டம் பக்கம் உள்ள பரமார்த்த லிங்கபுரம் தீயணைப்பு நிலையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அழகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கண்டக்டர் பொன்செல்வன் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அழகேசனை மீட்ட னர். பின்னர் தீயணைப்பு வண்டியில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அழகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
- குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
- 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை
கன்னியாகுமரி :
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலா ளர்கள் கூட்டம் திங்கள்ந கரில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கி னார். பொருளாளர் ஏசுரத்தினராஜ் வரவே ற்றார். செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலா ளர்கள் ரெஜூலின் ராஜகுமார், சுஜெய்ஜா க்ஸன், சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, மாவட்ட பிரதிநி திகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளபடி கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் 23 அணிகளின் சார்பிலும் அந்தந்த அணி களுக்கு என வழங்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகளை ஒன்றி யம் முழுவதும் நடத்துவது.
திங்கள்நகர்- அழகிய மண்டபம் மாநில நெடுஞ்சா லை நெய்யூர்-பரம்பை பகுதியில் மெது வாக நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்ப ணிகளையும், தண்டவாளம் குறுக்கே தாழ்வாக கட்டப்ப ட்டு உள்ள புதிய இரணியல் கால்வாய் தொட்டி ப்பாலத்தில் தண்ணீர் ஓடி செல்லும் வகையில் தொட்டி பாலத்தை தூக்கி உயர்த்த ரெயில்வே மற்றும் பொதுப்பணித்துறையை கேட்டுக் கொள்வது.
நெய்யூர் பேரூராட்சி நெய்யூர் வருவாய் கிராமத்தி ற்குட்பட்ட கொக்கோடு, பழவந்தான்கோணம், கண்ணோடு, இலந்தவிளை, பாளையம், ஆலங்கோடு உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை பிரிக்கி ன்ற வகையில் கொக்கோடு - பழவந்தான்கோணம் சாலை குறுக்கே நாகர்கோ வில் - திருவனந்தபுரம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், நோயாளிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், ஆலயம், கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் என தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தண்டவாள ங்களை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லை என்றால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதனால் நேரவிரயம், பணவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வான ரெயில்வே மேம்பா லம் அமைக்க இப்பகுதி மக்கள் தண்டவாளம் அமைக்கப்பட்ட 1979-ம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. எனவே மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகமும் கொக்கோடு - பழவந்தான்கோணம் இணைப்பு ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். காலதாமதம் செய்தால் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து தி.மு.க. தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட முடிவில் திங்கள்நகர் பேரூர் செயலாளர் சேவியர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.
- தீயணைப்பு ஊழியர்-வாலிபர் படுகாயம்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் வலியவளை பகுதியை சேர்ந்தவர் விபின் ஜோஸ் (வயது 48). இவர் குழி த்துறை தீயணைப்பு துறையில் மெக்கானி க்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்றார்.அவர் மார்த்தாண்டம் சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த இருச க்கர வாகனம் மோதியது. இதில் விபின் ஜோஸ் தூக்கி வீசப்பட்டார். அவரது கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்ட த்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் வேகமாக தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் சஜின் (26). இவர் மண்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு மீன் வலை கம்பனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். மேல்புறம் சாலையில் கழுவன்திட்டை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஜினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
- வழிநெடுகிலும் பொதுமக்களிடம் மாநாட்டுக்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி, ஆக.14-
அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்காக குதிரைகளுடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து இந்த மாநாடு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், லீபுரம் ஊராட்சி பொறுப்பாளர் லீன், பேரூர் செயலாளர்கள் தாமரைதினேஷ், சிவபா லன், ராஜபாண்டியன், சீனிவாசன், வீரப த்திரபிள்ளை, மனோகரன், குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் வக்கீல் ஜெயகோபால், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொ]ண்டனர்.
பேரணியானது விவேகானந்தா ராக் ரோடு வழியாக படகுதுறையை சென்றடைந்தது. வழிநெடுகிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்களிடம் அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் படகிலும் சென்று அ.தி.மு.க. மாநாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.
படகு துறையில் ராஜஸ்தான், ஒடிசா, மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிக ளும் குதிரையில் ஏறி அமர்ந்து மாநாட்டு பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினா ர்கள். இந்த நிகழ்ச்சி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது.
- இன்று இரவு கன்னியாகுமரி வருகிறார்
- அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார்
நாகர்கோவில் :
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப யணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொட ங்கிய அவர், பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறார்.
இந்த பயணத்தில் அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) இரவு கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை (15-ந்தேதி) விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ட்டபட்ட களியக்கா விளை யில் இருந்து அண்ணாமலை நடைபய ணத்தை தொடங்கு கிறார். காலை 8 மணிக்கு பயண த்தை தொடங்கும் அவர், மதியம் குழித்து றையில் பேசுகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு வெட்டுமணியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, இரவில் இரவிபுதூர்கடை வரை செல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். 17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட சாமியார் மடத்தில் இருந்து நடைபயணம் தொடங்கும் அவர், மணலி சந்திப்பில் நிறைவு செய்கிறார். மாலை யில் தக்கலை சந்திப்பில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறி சந்திப்பில் பயணத்தை முடிக்கிறார்.
மறுநாள் (18-ந்தேதி) நாகர்கோவில் தொகுதி க்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அவர் நடைபயணம் தொடங்குகிறார். வேப்பமூடு சந்திப்பு வரை செல்லும் அவர், அங்குள்ள காமராஜர் சிலை முன்பு பேசுகிறார். மாலையில் கன்னியாகும ரியில் அவர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கி றார். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மூலம் மக்க ளை சந்திக்கும் அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு கொடுக்கின்றனர்.
- பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
- குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி.திருமண மண்டபத்தில் 98-வது பொருட்காட்சி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை தினமாக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாளை (15-ந்தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையானதால் 15 மற்றும் 16-ந்தேதி 2 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த விடுமுறை நாட்களில் வாவுபலி பொரு ட்காட்சி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் கேரளா பகுதியில் உள்ள மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த பொருட்காட்சியில் குழந்தை களை குதூகலப்படுத்தும் மிகப்பெரிய ராட்டினங்கள், பெரியவர்களை குதூகலப்ப டுத்தும் மரணக்கிணறு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகள், கண்காட்சி பொருட்கள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏராள மானவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளது. மேலும் ஏராளமான கைவினை பொருட்களும் பொருட்காட்சியில் பார்வை க்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் உற்சாகமாக வந்து வாவுபலி பொருட்காட்சியை கண்டு களித்து செல்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்கள் புதிய ரக செடிகளை வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
- ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்ராஜ், தொழிலாளி. இவர், செம்மான்விளை சந்திப்பில் நின்ற போது அதே பகுதியைச் சேர்ந்த அங்கு வந்து தாக்கி உள்ளார். இதனை பார்த்த அபிலாஷ்ராஜ் தரப்பினர் விரைந்து வந்து ஈவின்ஜெறியை தாக்கினர். இந்த சம்பவத்தில் 2 பேரும் காயம் அடைந்தனர். நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி, ஈவின்ஜெறி மற்றும் அபிலாஷ்ராஜ் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அபிலாஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். ஈவின்ஜெறியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






