என் மலர்
நீங்கள் தேடியது "தீயணைப்பு ஊழியர்"
- தீயணைப்பு ஊழியர்-வாலிபர் படுகாயம்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் வலியவளை பகுதியை சேர்ந்தவர் விபின் ஜோஸ் (வயது 48). இவர் குழி த்துறை தீயணைப்பு துறையில் மெக்கானி க்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்றார்.அவர் மார்த்தாண்டம் சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த இருச க்கர வாகனம் மோதியது. இதில் விபின் ஜோஸ் தூக்கி வீசப்பட்டார். அவரது கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்ட த்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் வேகமாக தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் சஜின் (26). இவர் மண்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு மீன் வலை கம்பனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். மேல்புறம் சாலையில் கழுவன்திட்டை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஜினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.






