என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் குதிரைகளுடன் அ.தி.மு.க.பொன் விழா எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பேரணி
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
- வழிநெடுகிலும் பொதுமக்களிடம் மாநாட்டுக்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி, ஆக.14-
அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்காக குதிரைகளுடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து இந்த மாநாடு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், லீபுரம் ஊராட்சி பொறுப்பாளர் லீன், பேரூர் செயலாளர்கள் தாமரைதினேஷ், சிவபா லன், ராஜபாண்டியன், சீனிவாசன், வீரப த்திரபிள்ளை, மனோகரன், குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் வக்கீல் ஜெயகோபால், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொ]ண்டனர்.
பேரணியானது விவேகானந்தா ராக் ரோடு வழியாக படகுதுறையை சென்றடைந்தது. வழிநெடுகிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்களிடம் அ.தி.மு.க. மாநாட்டுக்கு திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் படகிலும் சென்று அ.தி.மு.க. மாநாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.
படகு துறையில் ராஜஸ்தான், ஒடிசா, மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிக ளும் குதிரையில் ஏறி அமர்ந்து மாநாட்டு பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினா ர்கள். இந்த நிகழ்ச்சி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது.






