search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா

    • 16-ந்தேதி நடக்கிறது
    • கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடக்கி றது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரி சனத்துக்கு அனுமதிக்கப்படு கிறார்கள்.

    ஆடி அமாவாசையை யொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகும ரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.

    அதன்பிறகு கடலில் புனித நீராடி விட்டு ஈரத்து ணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கி றார்கள். ஆடி அமாவா சையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப் பட்டு உள்ளன.

    இரவில் அம்மன் வீதி உலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகி றார்கள். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்க ளில் இருந்து கன்னியா குமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    கோவில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×