என் மலர்
கன்னியாகுமரி
- மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி
- குமரி மாவட்டத்தில் வரும் 7-ந் தேதி நடக்கிறது
நாகர்கோவில், ஆக.26-நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சார பயணம் மேற்கொள்கிறது. 7-ந்தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ெரயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் 3-ந்தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
7-ந்தேதி 17 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பிரச்சார நடைபயணம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காபட்டணம் துறைமுகத்தில் உரிய திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதில் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலை துறை கோயில்களில் அரசியல் புகுத்தப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டு வீராணி பூங்கா அருகில் உள்ள தெருவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 30-வது வார்டு வரது தெருவில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 44-வது வார்டு செயின்ட் ஆன்றனி தெருவில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 26-வது வார்டு ஊட்டுவாழ் மடம், சானல் கரை பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, உதவி பொறியாளர்கள் சந்தோஷ், ராஜசீலி, மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சந்தியா, கவுசிகி, நவீன்குமார், சொர்ணத்தாய், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், மாணவர் அணி அருண்காந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான்,
ஜீவா, வட்ட செயலாளர் சாகுல் ஹமீது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சாலையில் விழுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரும் வந்து மது குடிக்கின்றனர்.
இதில் சிலர் போதை தலைக்கேறி, சாலையில் அங்கும் இங்கும் தள்ளாடுவது, ஆபாச வார்த்தைகளை சத்தமாக பேசுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் நடமாடும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முட்டைக்காடு பகுதியசை் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், போதையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள், கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் ரகளையில் ஈடுபட்டவர், போதை அதிகமாகி சாலையிலேயே விழுந்து விட்டார். ஆடை அவிழ்ந்த நிலையில் என்ன நடக்கிறது என தெரியாமலே அவர் அங்கு படுத்து கிடந்தார். இதனை கண்ட பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், தினமும் 5 முதல் 10 பேர் இது போல் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு காரணம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை தான். ரோட்டோரத்தில் மது அருந்தி விட்டு போக்குவரத்து இடையூறு செய்வதும் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள கடைகளில் படுத்து கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த நிலை மாறும் என்றார்.
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் :
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு தடைவிதிக்க மறுத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பினை வரவேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த தீர்ப்பை வரவேற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பஸ்களில் பயணித்த பயணி களுக்கு பஸ்சில் ஏறி இனிப்புகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது
- சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்காததை கண்டித்து நடைபெற்றது
மார்த்தாண்டம் :
சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், குமரி மாவட்ட நீர்வளத்துறையை கண்டித்தும் விவசாய நிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரியும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.தலைமையில் இன்று கருங்கல் பஸ் நிலையத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் குமரி மாவட்ட நீர்வளத்துறை அதிகாரி ஜோதி பாஸ் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் விஜய்வசந்த் எம்.பி.யிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை சுமார் ½ மணி நேரமாக நடைபெற்றது. பின்னர் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வருகிற1-ந் தேதி சிற்றாறு பட்டணங்கால்வாய்களில் தண்ணீர் கண்டிப்பாக திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
அப்படியே 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை எனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு பொதுமக்களோடு சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் காங்கிரஸ் கமிட்டி பேரூர் தலைவர் ராஜகிளன் உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், துணை அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது
- நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
மார்த்தாண்டம் :
மார்த்தாண்டம் வடக்கு தெருவில் செயல்பட்டு வரும் ஞானதீபம் கல்லூரியில் ஓணப்பண்டிகை, கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலாச்சார விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தியது.
விழாவின் 2-ம் நாளில் விழாவிற்கு கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் தலைமை தாங்கி கல்லூரி முதல்வர் கலாராணி தலைமையில் சிறப்பு விருந்தி னர்கள் குத்து விளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்றுநர் டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பேசினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. பேராசிரியர் செல்வின் இன்பராஜ் நன்றி கூறினார். மதியம் அனை வருக்கும் ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கேரள பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனத்தை மாணவிகள் ஆடினார்கள். இதில் நடனம், பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை மாணவிகள் ஜீனு, ஆஷிகா தொகுத்து வழங்கினர். மாணவி வீனா நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செல்வின் இன்பராஜ், ராமச்சந்திரன், ஜெபா, செல்வி, ஜினி, ஜெனிபிரியா, திவ்யா, பேபி ஸ்டெலினா, ஆரதி கிருஷ்ணா, ஸ்ரீமதி, சுஜிதா, ஜெபகனி, விஜிலா, அஜிதா, சிநேகா, சிஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பூதப்பாண்டி :
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மணத்திட்டையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீதப்பால் பாலம் முதல் மண்ணடி வரை 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் பேச்சான்குளம் முதல் இறச்சகுளம் வரையில் ரூ.40 லட்சம் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி ேபான்றவையும் நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், மாவட்ட தி.மு.க. துணை செயலாாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்டஜெகதீஸ், ஒன்றிய செயலாளர்கள் செல்வன், பிராங்கிளின், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, யூனூஸ் பாபு, நபிலா அன்சார் மற்றும் பெனட், இலக்கிய அணி அமைப்பாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர்
- மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.
என். ஜி. ஓ. காலனி :
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் முதுநிலை விலங்கியல் துறை, விலங்கியல் ஆராய்ச்சி மையம், கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு மற்றும் சென்னை தேசிய உயிரியல் அறிவியல் கலைக்கூடம் இணைந்து விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர். கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆட்சி மன்ற குழு தலைவர் மணி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிஅகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும் கருத்தரங்ககுழு தலைவருமான பேராசிரியர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சுரேஷ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். சென்னை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஜுதீன் தொடக்கவுரையாற்றினார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரகாஷ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் டாக்டர். சுப்பிரமணியன் உட்பட பல்வேறு கல்லூரி பேராசிரி யர்கள் இதில் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக தாவரவியல்துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன் நிறைவுரையாற்றினார். உதவிபேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜா, டாக்டர் செல்வகுமார், டாக்டர். அமுதா, அக்னேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.
- மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் கோஷம் எழுப்பியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர்
- மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
இருப்பினும் மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்துக்கு இடையே பெட்ரோல்பங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து உள்ளனர்.இதைத்தொடர்ந்து பெட்ரோல்பங்கை மூடக் கோரி சின்ன முட்டத்தில் மீனவர்கள் நேற்று முன் தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் கோஷம் எழுப்பியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் முடிந்து கரை திரும்பிய மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இன்று 3-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விசைப்படகுகளும் 100-க்கும் மேற்பட்ட நாட்டுபடகு களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் இந்த விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் புனித தோமையார்ஆலயம் முன்பு மீனவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சின்னமுட்டத்தில் பர பரப்பும் பதட்டமும் நிலவு கிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று 18-வது நாளாக சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு எதிராக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சின்னமுட்டத்தில்இன்றும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது
- கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை தண்ணீரை நம்பியே விவசாயிகள் சாகு படி செய்துள்ளனர். சுமார் 6000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. கடைமடை பகுதியில் உள்ள நெற்பயிர்க ளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் துவச்சி உலக் கருவி பகுதியில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. 26 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் ஆழத்தில் உடைப்பு ஏற்பட்டதால் சானலில் உள்ள தண்ணீர் அந்த பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து தோவாளை சானலில் விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இரவு பகலாக உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது. இந்தநிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட தற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும் பணியை வேகமாக முடித்து தண்ணீரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டு வேகமாக நடந்தது. நேற்று மாலையுடன் பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து இன்று காலை தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி இருந்த நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
- விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புதிறன் பரி சோதனை மேற்கொள்ளப்ப டுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும், வீரியமும் கொண்டு இயங்கு வதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புதிறன் கொண்ட விதை குவியல்க ளிலிருந்து விதைக்கப்படும் விதை மூலம் அதிக பயர் எண்ணிக்கையில் பயிர்கள் வயலில் செழித்து வளரும். ஆனால் முளைப்புதிறன் குறைந்த விதைகளை பயன்படுத்தினால் குறைந்த அளவிலேயே பயிர்கள் வளரும். அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும்.
விதைச்சட்டம் 1966 பிரிவு 7 (பி)-ன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புதிறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. நெல், எள், கொள்ளு 80 சதவீதம், மக்காச்சோளம் 90 சதவீதம், சோளம், கம்பு, கேப்பை, பயறு வகைகள் 75 சதவீதம், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதம், பருத்தி 65 சதவீதம், மிளகாய் 60 சதவீதம் ஆகும்.
பயிர்களுக்கு ஏதுவான சூழ்நிலையில் விதைகள் ஒரு முளையிட்டு பின்னா வளர்ச்சிக்கு அத்தியாவசி யமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புதிறன் ஆகும். முளைப்புதிறன் சோதனையின்போது இயல்பானது. இயல்பற்றது. கடினமானது. உயிரற்றது என 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். அவற்றின் கடின விதை என்பது விதை உறையின் நச்சுதன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும்.
பயறு விதைகள் மற்றும் வெண்டை விதைகளில் இவை தனியாக எடுத்து கணக்கிடப்படும். இவைகள் வயல்களில் முளைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால் முளைப்புதிறன் கணக்கி டும்போது இயல்பான விதைகளுடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.
இந்த முறைகளின்படி முளைப்புதிறன் பரி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிர்க ளின் முளைப்புதிறன் கணக்கி டப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும்போது தங்களின் விதைகளின் முளைப்புதிறன் அறிந்து விதைத்திட தங்கள் விதைக்குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிர், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி விதை கட்டணமாக ரூ.80 செலுத்தி நாகர்கோவில் விதைப்பரிசோதனை நிலை ளளளளளயத்தில் விதை களின் முளைப்புதிறன் தெரிந்து விதைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
- நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று இந்த கல்லூரியில் ஓணப்பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர். இந்த நிலையில் திடீரென்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு வெளியே கொண்டு சென்று விட்டு கதவை இழுத்து மூடியுள்ளனர்.
ஆனால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்க ளிடையே எதற்காக மோதல் ஏற்பட்டது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமை யான மாணவர்களால் தான் மோதல் ஏற்பட்ட தாகவும் அடிக்கடி இது போன்ற மோதல்கள் நடப்ப தாகவும் பலர் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






