search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கலில் உண்ணாவிரத போராட்டம்
    X

    கருங்கலில் உண்ணாவிரத போராட்டம்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ‌.தலைமையில் நடந்தது
    • சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்காததை கண்டித்து நடைபெற்றது

    மார்த்தாண்டம் :

    சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், குமரி மாவட்ட நீர்வளத்துறையை கண்டித்தும் விவசாய நிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரியும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.தலைமையில் இன்று கருங்கல் பஸ் நிலையத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் குமரி மாவட்ட நீர்வளத்துறை அதிகாரி ஜோதி பாஸ் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் விஜய்வசந்த் எம்.பி.யிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பேச்சுவார்த்தை சுமார் ½ மணி நேரமாக நடைபெற்றது. பின்னர் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வருகிற1-ந் தேதி சிற்றாறு பட்டணங்கால்வாய்களில் தண்ணீர் கண்டிப்பாக திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

    அப்படியே 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை எனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு பொதுமக்களோடு சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

    போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் காங்கிரஸ் கமிட்டி பேரூர் தலைவர் ராஜகிளன் உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், துணை அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×